இந்த வார வேடிக்கை

இந்த சமுதாயத்தை கட்டி காத்து வரும் ம.இ.கா தலைவர் சாமிவேலு அவர்களின் செயல்தான் இந்த வார வேடிக்கை. சில வருடங்களுக்கு முன் இதே போல் தமிழ் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், கட்சி பெருந்தகைகள் அனைவரையும் கூட்டி PWTC- யில் ஒரு பெரிய கூட்டம் போட்டார்.(அப்போது திரு.பசுபதி அவர்கள் கூட மண்டபத்துக்கு வெளியே நின்று துண்டு அறிக்கை கொடுத்துக்கொண்டுயிருந்தார்.) அக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் சொல்லிகொடுப்பது சால சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாருங்கள் இப்போதும் அதே போல் ஒரு கூட்டம் போட்டு கணிதமும் அறிவியலும் தமிழில்தான் சொல்லிகொடுக்க வேண்டும் என்கிறார். என்ன கொடுமை சார் இது.....? பெரிய பெரிய மொழி அறிஞர்கள்,கல்விமான்கள் கூடி முடிவு செய்கிறார்கள், நாமும் ஆடுகள் போல் தலையாட்ட வேண்டும். பல பெற்றோர்கள் கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்திற்கு தயார் செய்த பிறகு இப்போது தமிழ்தான் சிறந்தது என்கிறார். மாண்புமிகு ம.இ.கா தலைவர் அவர்களே உங்கள் வேடிக்கை விளையாட்டை இந்த சமுதாயத்தின் மீதா விளையாடி பார்ப்பது. நீங்களாக கூடி ஒன்று சொல்கிறிர்கள்....பிறகு மீண்டும் கூடி அது தவறு என்கிறீர்கள். தெளிவாக இருங்கள் .... இல்லையெனில் யோக வகுப்புக்கு போங்கள்.

2 கருத்துகள்:

ஆதவன் சொன்னது…

இந்த வேடிக்கை இத்தோடு முடிந்ததா அல்லது இன்னும் தொடருமா?

அரசாங்கம் இன்னும் முடிவை அறிவிக்கவில்லையே..! அறிவிப்பு வரட்டும்.. பார்ப்போம்..!!

இந்த நாட்டில் எதிலெதில் அரசியல் ஆட்டம் ஆடுவது என்ற ஒரு தராதரம் இல்லாமலே போய்விட்டது. எல்லாம் அரசியல்.. எதிலும் அரசியல்..! நாடு உருப்பட்ட மாதிரிதான்..!

Wayang Kulit Malaysia சொன்னது…

வணக்கம் நண்பா,

இப்புதியவனை வரவேற்ப்பீர் என நம்புகிறேன்.

அரசியல் நடத்தி வருமானம் பார்த்தவர்கள் இப்போது கோமாளி வேடமிட்டு நகைசுவை நாடகம் ஆடுகிறார்கள். இந்த லட்சனத்தில் இவர்கள் சென்னை சென்று பிரவேசி மாநாட்டில் பேச போகிறார்களாம். வழக்கம் போல் நாம் அனைவரும் பார்வையாளர்களே.

என்ன கொடுமை ஸார் இது???