இந்த வார மரியாதை

மறைந்த முன்னால் தமிழ் வானொலி தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த வார மரியாதை. அன்னாரின் குடும்பத்தார்கு மலேசிய தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தமிழ் பற்றும் தமிழ் சேவையும் நீடுழி வாழ்க.

இந்த வார குட்டு.

இந்த வார குட்டு பி.பி.பி. கட்சியின் தலைவர் டத்தோ கேவிஎஸ்-க்கு. துணையமைச்சர் செனட்டர் முருகையாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு இரண்டு காரணம் கூறியிருந்தீர்கள்.
காரணம் ஒன்று.
முருகையா பண அரசியலில் ஈடுப்பட்டார்.
காரணம் இரண்டு.
தலைவர் பதவிக்காக முருகையா சதி வேலையில் ஈடுபட்டார்.

முதல் காரணத்திற்கான கேள்வி.
உங்கள் கட்சியில் தேர்தல் என்பதே நடக்கவில்லை. பிறகு எதற்காகா அவ்ர் பண அரசியலில் ஈடுபட வேண்டும். அப்படியே பண அரசியலில் ஈடுபட்டிருந்தால், தக்க ஆதாரத்துடன் நிறுப்பித்துயிருக்க வேண்டும். அப்படி செய்ய நீங்கள் தவறி விட்டீர்கள்.

காரணம் இரண்டிற்கான கேள்வி.
ஒரு ஞனநாயக நாட்டில் உள்ள ஒரு ஞனநாயக கட்சியில் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதை எதிர்கொள்வதற்கு உங்களிடம் தைரியமும் விவேகமும் இல்லாது போனது ஏன்? உங்களுக்கும் சாமிவேலுவுக்கும் பிறகு என்ன வித்தியாசம்.

பி.கு.
மலாய் தலைவர்களுடன் பல துணிச்சலான விவாதங்கள் நடத்தியிருக்கிறீர்கள். ஆனால் முருகையா விசயத்தில் உங்கள் போக்கு கொஞ்சமும் சரியில்லை.

இந்த வார பாராட்டு

கட்சி பேதம் பார்க்காமல் ஈழ தமிழர்களுக்காக ஒன்று கூடிய அனைவருக்கும் இந்த வார சிறந்த பாராட்டு. இந்திய தமிழர்கள் போல் அல்லாமல் ஒற்றுமை எனும் கவசத்துடன் மலேசிய தமிழர்கள் காலம்வென்ற சரித்திரம் பாடைக்க வேண்டும் என்பதே என் நீண்ட நாள் ஆவா. அதற்கு அடித்தளமாக பத்துமலையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஈழ தமிழர்களுக்காக ஒன்று கூடியது மிகவும் முக்கியமான சம்பவம் என நான் கருதுகிறேன். இந்த ஒற்றுமை நீடித்து அரசாங்கத்திடம் பல சலுகைகள் தேவைகள் பெற்று உலக அரங்கில் நம் குரல் அதிகார குரலாக ஒலிக்க வேண்டும்.

இந்த வார குட்டு

இந்த வாரம் மூவருக்கு அத்திரமான மூன்று குட்டுக்கள்.
குட்டு ஒன்று.
உலக தமிழினதலைவர் மு.கருணாநிதிக்கு. உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, எம்.பி சீட்களை வைத்து தேவையான இலாகா,மந்திரி துறை, சொந்தபந்தங்களுக்கு பதவி கேட்டு வாங்க தெரிந்த மனிதநேயத்துக்கு, ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்த வெறி பிசாசுகளின் காரியாங்களை நிறுத்த முடியவில்லை. தமிழ் பெண்களைச் சூரையாடி, கொன்று குவித்து, அடித்து நொறுக்கி கூத்தாடும் கொள்ளிவாய் பிசாசுகளைப் பார்த்து சிரித்து சிரிப்பொலியில் எழுதுங்கள். தமிழர் உலகம் மெச்சும்.

குட்டு இரண்டு.
இந்திய பாரத தேவி அன்னை மகாலட்சுமி சோனியாவுக்கு. உலகம் முழுவதும் தெரியும், உங்கள் உதவி இல்லாமல் அழுகிய பிணம் தின்னும் சிங்கள பேய் படைகள் இந்த அளவுக்கு அட்டகாசம் பண்ண முடியாது என்று. இரட்டை வேடம் போட்டு ஏன் பிறந்த வீட்டு பெயரை நாசம் செய்கிறீர்கள். உங்கள் மூத்தார் விமானம் வெடித்து செத்தார், மாமியார் குண்டு பட்டு மாண்டார், கணவர் குண்டு வெடித்து சிதறினார். இதற்கான காரணம் ஏன் தெரியுமா? யோசித்து பாருங்கள். இனி வரும் காலங்களில் புண்ணியம் தேடுங்கள்.

குட்டு மூன்று.
உலக நாடுகளுக்கு. தீவிரவாதத்திற்கும் சுதந்திர போரட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறீர்களே. ஒரு பிசாசு கூட்டம் ஒரு சமுதாயத்தின் மீது அட்டூழியம் செய்து வருவதைக் கண்டிக்க வக்கில்லாமல், உலக சமாதானத்தையும் மனித நேயத்தைப் பற்றியும் பேசிவருகிறீகள். எந்த உலக நாட்டுக்கும் மனித நேயத்தைப் பற்றி பேச யோக்கியதை இல்லை.

இந்த வார குட்டு

ஜன சக்தி பத்திரிக்கை ஆசிரியர் திரு.தமிழ்மணியின் இல்லத்தில் சாயம் ஊற்றி நாசப் படுத்திய சம்பவம் தொடர்பில் அறிக்கைவிட்ட திரு.வேள்பாரிக்கு இந்த வார குட்டு. அரசியலில் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. அரசியல் நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போல் நீங்கள் பயன் படுத்தும் வார்த்தை மிக மோசமாக இருக்கிறது. நல்ல தமிழையும் அரசியல் பண்பாட்டையும் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் வித்தியாசம் தெரிவாதில்லை.