இந்த வார மரியாதை

உலக தமிழ் கவிதைக்கு மகாகவி பாரதியார் போல மலாயா தமிழ் கவிதை உலகிற்கு பெருமை சேர்த்த கவிஞர் காரைக்கிலார் அவர்களுக்கு இந்த வார புது வருட சிறப்பு மரியாதை. மலேசியா தமிழர் வாழ்கையை ரவிவர்மன் காமெரா போல் அழகாக படம் பிடித்தவர். கண்ணதாசனுக்கு விழா எடுக்கும் நம்மூர் தமிழ் நெஞ்சங்கள் காரைக்கிலார் அவர்களுக்கும் ஒரு விழா எடுத்தால் இன்னும் சிறப்பு.

பி.கு.
காரைக்கிலாரின் மரபு கவிதையை படித்து, எனக்குள் ஒரு தோற்றத்தை கற்பனை செய்து வைத்திருந்தேன். வெள்ளை வேட்டி சட்டையில் பிற்போக்கு வாதியாக இருப்பார் என்று நினைத்திருந்தேன். ஒரு முறை அவரை நேரில் பார்த்த போது அசந்து போனேன். அகன்ற நெற்றியும், தெளிவான பார்வையும்,ஸ்மாட்டார்ன நாகரிக உடையில் உயரிய கருத்துக்கள் பேசி என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இந்த வார பூசெண்டு

திருமன்றில்,தமிழ் வலை பூங்க போன்ற பக்கங்களைத் தொடங்கி மலேசியா தமிழ் வலைப்பதிவாளர்களை ஆதரித்து, உலக தமிழ் இணையத்தில் மலாயா தமிழை வளர்க்கும் திரு.சுப.நற்குணன் மற்றும் திரு.சதிஷ்குமார் போன்றவர்களுக்கு இந்த வார பூசெண்டு.

இந்த வார வேடிக்கை

இந்த சமுதாயத்தை கட்டி காத்து வரும் ம.இ.கா தலைவர் சாமிவேலு அவர்களின் செயல்தான் இந்த வார வேடிக்கை. சில வருடங்களுக்கு முன் இதே போல் தமிழ் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், கட்சி பெருந்தகைகள் அனைவரையும் கூட்டி PWTC- யில் ஒரு பெரிய கூட்டம் போட்டார்.(அப்போது திரு.பசுபதி அவர்கள் கூட மண்டபத்துக்கு வெளியே நின்று துண்டு அறிக்கை கொடுத்துக்கொண்டுயிருந்தார்.) அக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் சொல்லிகொடுப்பது சால சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாருங்கள் இப்போதும் அதே போல் ஒரு கூட்டம் போட்டு கணிதமும் அறிவியலும் தமிழில்தான் சொல்லிகொடுக்க வேண்டும் என்கிறார். என்ன கொடுமை சார் இது.....? பெரிய பெரிய மொழி அறிஞர்கள்,கல்விமான்கள் கூடி முடிவு செய்கிறார்கள், நாமும் ஆடுகள் போல் தலையாட்ட வேண்டும். பல பெற்றோர்கள் கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்திற்கு தயார் செய்த பிறகு இப்போது தமிழ்தான் சிறந்தது என்கிறார். மாண்புமிகு ம.இ.கா தலைவர் அவர்களே உங்கள் வேடிக்கை விளையாட்டை இந்த சமுதாயத்தின் மீதா விளையாடி பார்ப்பது. நீங்களாக கூடி ஒன்று சொல்கிறிர்கள்....பிறகு மீண்டும் கூடி அது தவறு என்கிறீர்கள். தெளிவாக இருங்கள் .... இல்லையெனில் யோக வகுப்புக்கு போங்கள்.

இந்த வார ஸ்பெஷல் குட்டு

இந்த வார ஸ்பெஷல் குட்டு எனக்குதான். அதிகமான எழுத்து பிழைகளுடன் இடுகைகளை வெளியிட்டு வருவதற்கு எனக்கே இந்த வார ஸ்பெஷல் கிருஸ்துமஸ் குட்டு.

பின் குறிப்பு.....
இந்த இணைய தளமும், தமிழ் மென்பொருளும் எனக்கு மிக புதியவை. சில சமயம் நான் ஒரு வார்த்தை டைப் செய்ய வேறு ஒரு வார்த்தை வந்து விடுகிறது. ல..ழா..ந. போன்ற எழுத்து பிழைகள் அதிகமாக வந்துவிடுகிறது. என் வலைப்பதிவிற்கு வருகை தரும் அனைவரிடமும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். என் குறைகளை நீக்கிக் கொள்ள ஆவண செய்வேன். நன்றி.

இந்த வார குட்டு

குட்டு ஒன்று.........................
தங்களைப் போல் கெட்டி காரர்கள் வேறு யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கி கலாய்க்கும் THR ராகா கலக்கல் காலை குழுவினர்களுக்கு இந்த வார குட்டு.

குட்டு இரண்டு ............
நூறு வித ஆட்டங்களை ஆடுவதாக எண்ணி, கண்ணைக் கூசும் கலர் உடைகளுடன் கெட்ட ஆட்டம் போட்ட ஆட்டம் நூறு வகை ஆட்டக்காரர்களுக்கும், இதுபோல மகா அருமையான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த ஆதரவு தரும் பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மற்றும் ஆங்கில இசை உலக தரத்திற்கு இணையாக அறிவிப்பு செய்த பலே மன்னர்\மன்னிகளுக்கும் இந்த வார இன்னும் ஒரு குட்டு.

அலி பாபா- தமிழ் திரைப்படம்... ஒரு கண்ணோட்டம்...

 • வெகு நாட்களுக்கு பிறகு ஒரு திருப்தியான சஸ்பென்ஸ் தமிழ் திரை படம் பார்க்க முடிந்தது. சில குறைகள் இருந்தாலும் கதை நகரும் விதம் நம்மை கவரவே செய்கிறது.
 • கதை- சிறு சிறு திருட்டுக்கள் செய்து வரும் திருடன் ஒருவனின் வங்கி கணக்கில் திடிரென்று என்பது லட்சம் பணம் டிபோசிட் ஆகிறது. கூடவே ஒரு கொலை நடக்கிறது. யார் அந்த கொலையை செய்தது,எதற்காக பணம் கை மாறியது என்பதுதான் கதை.
 • எதிர்பாராத திருப்புமுனை,சின்ன சின்ன சஸ்பென்ஸ் படத்தின் விறுவிறுப்புக்கு காரணம்.
 • வழக்கம் போல் பிரகாஷ் ராஜ் தன் சிறந்த நடிப்பை இதிலும் காட்டிஇருக்கிறார். திருட்டுக்கு அவர் சொல்லும் காரணம் லாஜிக்கே.
 • மலையாள நடிகர் பிஜி மேனன், அதிகம் பேசாமல் கண்களாலே பேசி நடித்திருக்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்தான் கொலை செய்தவர் போல் தோன்றும்.
 • ராதாரவி மற்றும் திலகன் இருவரும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளார்கள்.
 • அசிஸ்டென் கமிஷனராக வரும் அழகம் பெருமாள் இதில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
 • வி.தி.விஜயனின் எடிட்டிங் கதையை குழப்பாமல் தன் அனுபவத்தை காட்டிருக்கிறார்.
 • இசை வித்தியாசாகர். சன் டி.வியில் 'கிருஷ்ண கிருஷ்ண' பாடலை போட்டு பிரபலம் ஆக்கிவிட்டார்கள். பின்னணி இசையும் அவ்வளவாக பிரமாதம் என்று சொல்வதற்க்கில்லை.
 • நிலன் கே.சேகர் என்கிற புதுமுகம் இயக்குனர். கதை,வசனமும் இவரே. முதல் படத்திலே வெற்றி. தொடர்ந்து இவரிடம் இருந்து பல நல்ல படங்களை எதிர்பார்க்கலாம்.
 • இறுதியில் கொலைக்கான காரணம் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது.
 • ஒரு பத்து நிமிடம் பாத்ரூம் போய் வந்தால், கதையே புறியாமல் போய்விடும்.
 • ஆனலும் இரண்டு மணி நேரம் சலிக்காமல் ஒரு கதை சொன்ன இயக்குனருக்கு ஒரு சின்ன பூ செண்டு.

இந்த வார மரியாதை

அமரர் சா. அ. அன்பானந்தன் அவர்களுக்கு இந்த வார மரியாதை. அன்றைய இளைஞர்களை நல் வழி படுத்தி , வாசிக்கும் பழக்கத்தை வளர்த்து நல் சிந்தனைகளை தூவியவர் அமரர் ச.அ.அன்பானந்தன். இளைஞர்கள் மட்டுமே இளைஞர்கள் அமைப்பின் தலைர்வர்காளாக இருக்க முடியும் என்று கூறி இளைஞர் வயதை கடந்ததும் பதவி விலகி ஒரு முன் உதாரணமாக இருந்தார். பொது உலகில் அவருக்கு இருந்த தொடர்பின் மூலம் நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாம், அனால் சுயநலன் பார்க்காமல் கண்ணியமாகவும்,நேர்மையாகவும்,பண்பாகவும் வாழ்ந்து மறைந்த அமரர் ச.அ.அன்பானந்தன் அவர்களுக்கு ஒரு மரியாதை அல்ல நூறு மரியாதை செய்யலாம்.

இந்த வார குட்டு

.இ.கா. தலைவர் சாமிவேலு அவர்களுக்கு இந்த வார குட்டு. மந்திரி பதவியில் இருக்கும் போது பல தேவைகளை கேட்டு பெறாமல், சமுதாயத்தின் ஓட்டு மொத்த கண்டனத்துக்கு ஆளான பிறகு இப்போது 'இந்திய சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்' என அறிக்கை விட்டதற்கு இந்த வார குட்டு. அறிக்கை விடுவதை முடிந்த வரை தவிர்த்து, அரசாங்கத்திடம் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தேவைகளை கேட்டு பெறுவதில் முனைப்பு காட்டுங்கள். இந்த சமுதாயம் தலைமுறை தாண்டியும் உங்களுக்கு கடைமை பட்டிருக்கும்.

இந்த வார வேடிக்கை

.பி.எப். கட்சி மாநாடுதான் இந்த வார வேடிக்கை. கட்சி மாநாடு நடந்த ஹோட்டல் முன் கட்சியின் ஒரு பிரிவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் எல்லா பத்திரிக்கை, தொலைகாட்சி செய்திகளில் முதன்மை செய்தியாக வந்தது. பிற இன மக்கள் மட்டும் அல்ல நாமும்தான் அதை வேடிக்கை பார்த்தோம். ஜனநாயகத்தின் மகிமையை பேசிய அமரர் டான் ஸ்ரீ பண்டிதன், தான் இறக்கும் தருவாயில் ஜனநாயகத்திற்கு புறம்பாக கட்சியின் தலைமை பொறுப்பை தன் மனைவியிடம் ஒப்படைத்ததன் விளைவுதான் இன்று நடக்கும் எல்லா கூத்துகளுக்கும் காரணம். ஜனநாயகத்துக்கு எதிராக யார் எது செய்தாலும் விளைவு எதிர் மறையாகத்தான் இருக்கும். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும். ஜாக்கிரத்தை.

என்ன வென்று சொல்வது?

 • வருடம் எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் இடைநிலை பள்ளி படித்துக்கொண்டு இருந்த காலம். தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் சம்பந்தமான கூட்டம் நாடு தழுவிய நிலையில் நடந்து கொண்டிருந்தது.
 • தமிழ் இளைஞர் மணி மன்றம், அப்போதைய தமிழ் ஓசை பத்திரிக்கை ஆசிரியர் திரு.ஆதி குமணன் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் தமிழ் எழுத்து மாற்றத்தை கடுமையாக எதிர்த்தனர்.
 • தாமான் டத்தோ ஹோர்மட்,சன்வே பொது மண்டபம் பொது கூட்டங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. சுபாங்,கம்போங் லிண்டுங்க்கான் ஏரியாவில் எந்த பொது கூட்டம் நடந்தாலும் டத்தோ ஹோர்மாட் பொது மண்டபத்தில்தான் நடக்கும்.
 • தமிழ் இளைஞர் மணி மன்றம் சார்பாக, தமிழ் எழுத்து சீர்திருத்தம் எதிர்ப்பு கூட்டம் அங்கு நடந்தது. அங்கு பேசிய அனைவரும் தமிழ் எழுத்து சீர்திருத்தம் கூடாது என்று பேசினார்கள்.
 • மணி மன்றம் சார்பில் பேசிய ஒருவர்(திரு.விஜயன் என்று நினைக்கிறேன்.) 'கணினிக்கு ஒத்து வரவில்லை என்றால் கணினியை தூக்கி வீசு, தமிழ் மொழியை மாசு படுத்தாதே' என்று ஆவேசமாக பேசினார்.
 • திரு.ஆதி குமணன் தொடர்ந்து தமது பத்திரிக்கையில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கடுமையாக எதிர்த்து எழுதி வந்தார்.
 • அனால் இதை எல்லாம் மீறி இன்று உலக அளவில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை ஏற்று கொண்டாகி விட்டது.
 • கால போக்கில் தமிழ் இளைஞர் மணி மன்றமும் சரி, திரு.ஆதி குமணனும் சரி தமிழ் எழுத்து சீர்திருத்ததை ஏற்று கொண்டு விட்டார்கள்.
 • இதில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. ஒரு கால் தமிழ் இளைஞர் மணி மன்றம், திரு.ஆதி குமணன் போன்றோர்களின் கருத்துக்களை கேட்டு தமிழ் எழுத்து சீர்திருத்ததை அமல் படுத்திஇராமல் இருந்தால், தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிக்க பட்டிருக்காதா? உலகமே கணினி மயமாகி வரும் வேலையில் நாம் பின் தங்கி இருக்கமாட்டோமா?
 • 'லை' போன்ற எழுத்து வடிவம் ஆதிகாலத்தில் வழக்கில் உள்ள ஒன்று தானே? பிறகு எப்படி இது தமிழ் எழுத்து மாற்றம் ஆகும்.
 • இதில் நான் கற்று கொண்ட பாடம் என்னவெனில், எதையும் தீர ஆராய்ந்து, அதன் பலா பலன்கள் தெரிந்து அதன் பின்பே எதையும் எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்று முடிவு செய்ய வேண்டும். கண்மூடி தனமாக எதையும் எதிர்க்க கூடாது.

இந்த வார மரியாதை.

அமரர் வி.டேவிட் அவர்களுக்கு இந்த வார மரியாதை. ஆளும் கட்சியில் இணைந்தால் மந்திரி பதவி கிடைக்கும் என்று ரகசிய பேட்சு வார்த்தை நடந்தும், அரசியல் போர்வையில் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தும், கடைசி வரை தொழிலாளர் கட்சிக்காகவும், சிறந்த எதிர் கட்சி தலைவராகவும் வாழ்ந்து மறைந்த மக்கள் தொண்டர் டாக்டர் வி.டேவிட் அவர்களுக்கு இந்த வார சிறந்த மரியாதை.

இந்த வார வருத்தம்

ஜோகூர் அருகே நடந்த பெருஞ்சாலை பஸ் விபத்து மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. பெரு நாட்களின் போது தொடர்ந்து இது போல பஸ் விபத்துக்கள் நடப்பதும் அதனால் ஏற்படும் உயிர் இழப்பும் மிக பெரிய வருத்தமாக இருக்கிறது. சாலை போக்குவரத்து கழகமும், போலிஸ் துறையும் உடனடியாக இது போன்ற இழப்புகள் ஏற்படமால் இருக்க ஆவண செய்ய வேண்டும். தவறினால் இந்த இரு துறைக்கும் இரண்டு பலமான குட்டு வழங்கப்படும்.

இந்த வார குட்டு

தொடர்ந்து பல முறை மண் சரிவு ஏற்பட்டு, அதனால் உயிர், உயிர் அல்லாத சேதம் ஏற்பட்டும் சரியான பாதுகாப்பு நடவடிக்கை, நில ஆய்வு மேற்கொள்ளாமல் காலம் கடத்திய ஊராட்சித்துரை, நில ஆய்வு கழகம், மாநில அரசு ஆகிய மூன்றுக்கும் பலமான குட்டு.

தமிழ் நாளிதல்கள் அடிக்கும் கோமாளி கூத்து

ஒரே மொழி பள்ளி முறையை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோ முக்ரிஸ் மகாதீர் கூறிய பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் மொழி பற்றாளர்கள் கருத்துகளை வெளியிட்டு இரண்டு நாட்களாக தமிழ் நாளில்தல்கள் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை. தமிழ் பள்ளிகளை மூடிவிடுவதே சரி என்பது என் கருத்து. ஏன் தமிழ் பள்ளிகளை மூடி விடவேண்டும்? பல காரணங்கள் சொல்கிறேன்..........

 • நூறுக்கு தொண்ணுற்று ஒன்பது தமிழ் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். குறிப்பாக தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மேடை, வானொலி, தொலைக்காட்சி-யில் பேசும் தமிழ் மொழி அறிஞர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு ஆணுப்பியவர்கள். இன்று தமிழ் நாளிதல்களில் கண்டன அறிக்கை விடும் பல தலைவர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பியவர்கள். மலேசியாவில் இந்திய ஆய்வியல் துறை உள்ள ஒரே பல்கலைகழகம் என்று பீத்தி கொள்ளும் பல்கலைகழக விரயுரையளர்கள், பேராசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கடமை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இளைஞர் மன்ற தலைவர்கள், இந்து சங்க தலைவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் பள்ளிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போது நம் நாட்டில் ஏன் தமிழ் பள்ளிகள் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சாமிவேலு மற்றும் சரவணன் தவிர பெரும்பாலான தலைவர்கள் (சுப்ர, பண்டிதன், palanivelu, டிஏபி, பிபிபி, கெரக்கான், கேஅடிலன் தலைவர்கள் உட்பட) மற்றும் பலர்தங்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

 • தமிழ் மொழி வளர தமிழ் பள்ளிகள் மட்டும் போதும் என்பது ஒரு மூட நம்பிக்கை. அமரர் அன்பானந்தன் அவர்கள் காலத்தில் வாசிக்கும் பழக்கத்தை பெரும் அளவில் இளைஞர்களிடையே ஊக்குவித்து வந்தார். அன்று பலர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் படிக்கும் எழுதும் திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த இயக்கமும், கட்சியும், சங்கமும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய தலைவர்களுக்கு தேவை, எப்படி பணம் பண்ணுவது, இளைஞர்களை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது. அன்று பெரும்பாலனவர்கள் வீட்டில் கல்கண்டு, விகடன், குமுதம், மாத நாவல்கள் என்று படிப்பதற்கு இருக்கும். வாரம் அல்லது மாத தமிழ் இலக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல் நடக்கும். மொழி வளர்க்க பெரும் முயற்சிகள் நடக்கும். அனால் இன்று மொழி வளர்பதற்கு தலைவர்கள், இயக்கங்கள் போதுமான முயற்சிகள் செய்வதில்லை. அழகு ராணி, வேட்டி ராஜா, சினிமா பாடல் போட்டி போன்றவையே இன்றைய கலாசாரமாக போய் கொண்டிருக்கிறது. மொழி அறிவு வளராத எந்த சமூகமும் உருபடாது என்பது அறிந்தும் மொழி வளர்க்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் கடமை செய்யாமல் இருபது மகா கேவலம். போதாத குறைக்கு சிவாஜி திரைப்பட பிரிவியு ஷோ காண்பதற்கு முதல் ஆளாக செல்வார்கள் அல்லது துணிகடை, சாப்பாட்டு கடை திறப்பு விழாவுக்கு செல்வார்கள். அண்மையில் மக்கள் தலைவர் ஒருவர் பி ஜெ-யில் பாப் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்கினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். எப்படி மோசமான சமுதாயதிற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.

 • இன்று பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் எழுதும் மாணவர்களுக்கு சந்தையில் தமிழ் மொழி தேர்வு வழி காட்டி நூல் கிடையாது. எப்போதாவது பட்டத்துக்கு பிந்திய ஆசிரியர்கள் பயிற்சி மாணவர்கள் சில தேர்வு வழி காட்டி நூல்கள் எழுதுவார்கள். அதும் எல்லா மாணவர்களுக்கும் கிடைக்காது. இந்த எஸ்.தி.பி.எம். பரிட்சைக்கு தமிழ் எடுக்கும் மாணவர்கள் கதி அதோ கதிதான். ஒரே ஒரு தமிழ் கோவை இருக்கும். அதுவும் மீசியும்மில் உள்ளது போல யார் கையிலாவது இருக்கும். அதை வாங்குவதற்குள் பரிட்சையே முடிந்துவிடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் என்ன படிக்க வேண்டும் என்றே பல மாணவர்களுக்கு தெரியாது. எஸ்.தி.பி.எம்.-க்கு டேக்ஸ் புத்தகமும் கிடையாது. அனால் தமிழ் படி, தமிழ் படி என்பார்கள். இன்று வரை எந்த அரசியல் கட்சியாவது, தமிழ் இயக்கமாவது தமிழ் தேர்வு வழி காட்டி நூல் எல்லா தமிழ் எழுதும் மாணவர்களுக்கு கிடைக்கும் வகை பற்றி அக்கறை உள்ளதா? பல மாணவர்கள் தமிழ் பரிட்சை எழுதாதற்கு காரணம், என்ன படிக்க வேண்டும் என்று தெரியாததே.... இந்த சிக்கலை போக்குவதற்கு எந்த தலைவராவது பேசி இருப்பாரா? தமிழ் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு சிக்கல்கள் பல உள்ள போது ஏன் நமக்கு தமிழ் பள்ளிகள் ?

 • என் உறவினர் ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அனைவரையும் மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பினார். காரணம் கேட்டபோது , அவர் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும், என்ஜிநீர் ஆக்க வேண்டும் என்றார். நான், ஏன் தமிழ் பள்ளிக்கு அனுப்பினால் மகள்கள் டாக்டர், எஞ்சினியர் ஆகாதா என்று கேட்டேன். அதற்க்கு அவர், உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்க வையுங்கள், என் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். தமிழ் பள்ளியில் படித்தால் தங்கள் பிள்ளைகள் முட்டாள் ஆகி போகும் என்று கருதும் மானங்கெட்ட இந்த சமுதாயத்திற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.

 • நம் குறைகளை முதலில் களைய முற்படுவோம். பிறகு சண்டைக்கு தயார் ஆவோம். கத்தி இல்லாமல் போருக்கு சென்று பயன் இல்லை.

இந்த வார வேடிக்கை

'மைக்கா ஹோல்டிங்க்ஸ் -க்கு சொந்தமான காப்புறுதி நிறுவனத்தை விற்பதால் நன்மை என்றால், நேசா ஒரு போதும் அதற்கு தடையாக இருக்காது.'
மக்கள் தலைவர் டத்தோ. எஸ் . சுப்ரமணியம்.

அமரர் கல்கி


வணக்கம்.
புதுக்கவிதைக்கு பாரதியார் முன்னோடி என்பது போல் தமிழ் நாவல் உலகிற்கு அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி முன்னோடி என்று துணிந்து கூறலாம். செய்யுள் மற்றும் பாடல் வடிவத்தில் நம் இலக்கியங்கள் செயல் பட்டு வந்த காலத்தில் நாவல் முறையில் கதை சொல்லும் வடிவை தமிழ் உலகிற்கு அறிமுக படுத்தியதில் அமரர் கல்கிக்கு பெரும் பங்கு உண்டு. சரிந்திர நாவல் எழுதி பெரும் புகழ் பெற்றவர்கள் அக்காலத்தில் இருவர். அவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாண்டில்யன் ஆவார். கல்கி எழுதிய 'பார்த்திபன் கனவு,சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாதவை. சில வருடங்களுக்கு முன் 'கணையாழி' பத்திரிகை நடத்திய ஆய்வில் ஒருவர் கூட கல்கி அவர்களை சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யவில்லை. இதற்கான காரணத்தை யாராலும் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று வரை கல்கியின் புத்தகங்களுக்கு புது புது வாசகர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்று பெரும் எழுத்தாளர்களாக தங்களை கூறி கொள்ளும் எல்லோரும் கல்கி கதைகளில் தங்கள் வாசிப்பை தொடங்கிஇருப்பார்கள். இருந்தும் ஏனோ கல்கி கதைகளை சற்று தள்ளி வைத்துருப்பார்கள். ஏன் அவர் அதிகமான சமஸ்கிருத வார்த்தைகளை தன் கதைகளில் பயன் படுத்திய காரணமா? அல்ல சரித்திரங்களை தன் கதை கருவாக எடுத்து கொண்ட காரணமா? எது எப்படி இருப்பினும் கல்கி கதை மாந்தர்கள் நம் மனதை விட்டு நீண்ட காலம் அகலாமல் இருப்பார். இன்று நம்மிடையே வாசிப்பு பழக்கம் குறைத்து வருகிறது என்பதை நினைக்கும் போது மனம் பதற்றம் அடைகிறது. உங்கள் வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ள கல்கி அவர்களின் சரித்திர நாவல்கள் பெரிதும் துணை புரியும். 'பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை ஒரு முறை படித்து பாருங்கள். அமரர் கல்கியில் கதை சொல்லும் சூட்சம பாணி உங்களுக்கு புரியும்.இந்த வார கேள்வி

இந்த வார கேள்வி .............

அமரர் ஆன Tan Sri பண்டிதனிடம் .......,
'யாருக்காக கட்சி தொடங்கிநிர்கள் .....? உங்கள் கொள்கை என்ன ...? உங்கள் கட்சியின் சாதனை என்ன....? கட்சியில் மூத்தவர்கள் பலர் உள்ளபோது, குடும்ப சொத்து போல் கட்சியின் தலைவர் பதவியை மனைவிக்கு கொடுத்தது ஏன்...? சாமிவேலுவை போல் நீங்களும் உங்கள் கட்சிக்கு அடுத்த கட்ட தலைவரை வளர்க்காமல் போனது ஏன்.....?

இன்று கோவில்கள் வியாபார கடைகளாக உரு மாறி வருகின்றன . குறைந்த பட்சம் 50 ரிங்கிட் இல்லாமல் கோவிலுக்கு செல்வது முடியாத காரியம். அர்ச்சனை சீட்டு 2 வெள்ளி , அர்ச்சகருக்கு தட்டில் 5 வெள்ளி போட வேண்டும், அடுத்து அர்ச்சகர் சொல்வார் 'சாமிக்கு மாலை வாங்கி போடுங்கோ ,' என்பார். மாலையின் விலை 30 வெள்ளி என்பார், இதோடு முடிந்தது என்று நினைபிர்கள் ... சுக்க்ரன்னுக்கு நெய் விளக்கு போடுங்கள் என்பார், விலையோ 10 வெள்ளி, சரி கிளம்பலாம் என்றால் சூடம் கொளுத்த மறந்து இருபிர்கள் , சூடம் விலை 6 என்பார் ஒரு பெட்டி. மீதம் இருக்கும் சில்லறையை அள்ளி உண்டியலில் போட்டு விட்டு வர வேண்டியதுதான்.

டீ அருந்தும் நேரம் ............