அலி பாபா- தமிழ் திரைப்படம்... ஒரு கண்ணோட்டம்...

 • வெகு நாட்களுக்கு பிறகு ஒரு திருப்தியான சஸ்பென்ஸ் தமிழ் திரை படம் பார்க்க முடிந்தது. சில குறைகள் இருந்தாலும் கதை நகரும் விதம் நம்மை கவரவே செய்கிறது.
 • கதை- சிறு சிறு திருட்டுக்கள் செய்து வரும் திருடன் ஒருவனின் வங்கி கணக்கில் திடிரென்று என்பது லட்சம் பணம் டிபோசிட் ஆகிறது. கூடவே ஒரு கொலை நடக்கிறது. யார் அந்த கொலையை செய்தது,எதற்காக பணம் கை மாறியது என்பதுதான் கதை.
 • எதிர்பாராத திருப்புமுனை,சின்ன சின்ன சஸ்பென்ஸ் படத்தின் விறுவிறுப்புக்கு காரணம்.
 • வழக்கம் போல் பிரகாஷ் ராஜ் தன் சிறந்த நடிப்பை இதிலும் காட்டிஇருக்கிறார். திருட்டுக்கு அவர் சொல்லும் காரணம் லாஜிக்கே.
 • மலையாள நடிகர் பிஜி மேனன், அதிகம் பேசாமல் கண்களாலே பேசி நடித்திருக்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்தான் கொலை செய்தவர் போல் தோன்றும்.
 • ராதாரவி மற்றும் திலகன் இருவரும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளார்கள்.
 • அசிஸ்டென் கமிஷனராக வரும் அழகம் பெருமாள் இதில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
 • வி.தி.விஜயனின் எடிட்டிங் கதையை குழப்பாமல் தன் அனுபவத்தை காட்டிருக்கிறார்.
 • இசை வித்தியாசாகர். சன் டி.வியில் 'கிருஷ்ண கிருஷ்ண' பாடலை போட்டு பிரபலம் ஆக்கிவிட்டார்கள். பின்னணி இசையும் அவ்வளவாக பிரமாதம் என்று சொல்வதற்க்கில்லை.
 • நிலன் கே.சேகர் என்கிற புதுமுகம் இயக்குனர். கதை,வசனமும் இவரே. முதல் படத்திலே வெற்றி. தொடர்ந்து இவரிடம் இருந்து பல நல்ல படங்களை எதிர்பார்க்கலாம்.
 • இறுதியில் கொலைக்கான காரணம் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது.
 • ஒரு பத்து நிமிடம் பாத்ரூம் போய் வந்தால், கதையே புறியாமல் போய்விடும்.
 • ஆனலும் இரண்டு மணி நேரம் சலிக்காமல் ஒரு கதை சொன்ன இயக்குனருக்கு ஒரு சின்ன பூ செண்டு.

0 கருத்துகள்: