2009-இல் நான் ரசித்த 10 படங்கள்.

Naan_kadavul

1. பசங்க - தமிழில் சிறுவர்களுக்கான படங்கள் வருவது மிக சொற்பம். எனக்கு தெரிந்து மை டியர் குட்டிசாத்தான், அஞ்சலி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பசங்க. சிறுவர்களை வைத்து கூத்தடிக்காமல் ... சிறுவர்களின் உலகில் புகுந்து எல்லோரும் ஆசைபடும்படி ஒரு படம். இயக்குனர் பாண்டிராஜ்கு ஒரு மிக பெரிய பூச்செண்டு..... சபாஷ்.......

2. நான் கடவுள் - இது படமே இல்லை ...ஆழ்ந்து படிக்க வேண்டிய மிக பெரிய நாவல். அன்பே சிவம், கற்றது தமிழ் போன்று ஆராய்ச்சிக்கு உரிய படம். பாலா மட்டும் ஐரோப்பிய சினிமா எடுக்க போயிருந்தால், உலக சினிமாவையே மாற்றி இருப்பார். லேட் பண்ணாமல் இதே போல் இன்னொரு படமும் கொடுத்துவிடுங்கள்.

3. ஈரம் - தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு மாறி வருகிறது என்பதற்கு இப்படம் ஒரு சான்று.... இது ஒரு பேய் படம் ... ஆனால் வழக்கமான பேய் படத்திற்கு உரிய எந்த காட்சியும் இல்லாமல் மிக தெளிவாக விறுவிறுப்பாக நகரும் திரைகதை....

4. உன்னைப் போல் ஒருவன் - இது கமல் படம் என்பதை விட மோகன்லால் படம் என்று சொல்வதே சிறப்பு. அந்த அளவுக்கு மோகன் லாலின் நடிப்பு. ஆத்திரத்தில் அவர் முகசதை கூட ஆடுகிறது. - கமல் - இந்திய சினிமாவில் உன்னை போல் யார் உண்டு..?

5. வெண்ணிலா கபடி குழு - கோடி கோடியாய் கொட்டி நம்மை துன்புருத்தும் சினிமாகளுக்கு நடுவே மென்மையான கதை, மனம் விட்டு சிரிக்க தூண்டும் நகைசுவை .... (இருந்தாலும் கதாநாயகனைச் சாகடித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை)

6. காதல் கதை - சினிமாவில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்று எதுவும் இல்லை. பார்க்கும் நம் கருத்துக்கு உட்பட்டது. என்ன சொல்ல வேண்டுமோ அதை, அந்த கதைக்கு தேவையான காட்சிகளை மிக தைரியமாக சொன்ன திரு. வேலு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு கைத்தட்டல்.....

7. நாடோடிகள் - இதுவரை காதலை சேர்த்து வைக்கும் படத்தைதான் தமிழ் சினிமாவில் பார்த்து வந்தோம். முதல் முறையாக எந்த ஹீரோயிசமும் இல்லாமல் காதலுக்காக நண்பர்களின் கதையை பார்த்தோம்.

8. திறு திறு துறு துறு - சம்பந்தமே இல்லாத சண்டை காட்சிகள், குடும்பத்தோடு பார்க்க முடியாத பாடல் காட்சிகள் என நமக்கு சலித்து போன திரைகதைகளைத் தாண்டி ..... ஒரு நல்ல படம் அதுவும் குடும்பத்தோடு பார்த்து சிரிக்க ஒரு படம்.(தமிழில் இப்போதெல்லாம் நகைச்சுவை படங்கள் குறைந்துக் கொண்டே வருகிறது).

9. மதுரை To தேனி - பட்டென்று கதை ஆரம்பித்து ... பட்டென்று பேருந்தில் பயணித்து ...... பட்டென்று பஞ்ஞாயத்து ஆரம்பித்து ......... பட்டென்று திருமணம் ஆகி .... பட்டென்று கதை முடிந்து விடுகிறது ..... பிரமாண்டம் என்கிறார்கள், ஹீரோ ஓப்பனிங் என்கிறார்கள், ஹீரோயின் கவர்ச்சி என்கிறார்கள் ... இந்த படம் பாருங்கள் ..... இப்படியும் படம் எடுக்கலாம் என்பதற்கு உதாரணம்.

10. லாடம் - சில ஓட்டைகள் இருந்தாலும் ..... என்னடா படம் இது என்று இல்லாமல் .... அடுத்து என்ன நடக்கும் ... என்ன நடக்கும் என்று நமக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் படம்.... Simply Super என்பார்களே ... அப்படி ஒரு படம்....


பி.கு.

இதுவும் நல்ல படம் தான்

1. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்.(வாழ்த்துகள்)
2. யாவரும் நலம்(பி.சி.ஸ்ரீராமுக்கு ஒரு ஸ்பெஷல் பூச்செண்டு)
3. பேரான்மை(சத்யராஜ்,சரத்குமார் போன்ற Heavy நடிகர்கள் நடிக்க வேண்டிய படம்)
4. மாயாண்டி குடும்பத்தார்.(சிரியல் போல் கொஞ்சம் ஓவரோ?)

குட்டு விழும் 10 படங்கள்

Kandasaamy - Vikram, Shriya

1. வில்லு - ச்சபா ............... என்னத்த சொல்ல .........

2. பெருமாள் - 'என்ன கூத்து காட்றிங்க' என்கிற ரகம் படம். இந்த லட்சணத்தில் நிர்வாண காட்சி வேறு .......

3. மரியாதை - ஒரு காலத்தில் விஜயகாந்த் நல்ல நடிகராகத்தான் இருந்தார். இன்னும் அப்படியே நினைத்துக்கொண்டிருந்தால் எப்படி? முகவாகும் உடல்வாகும் இப்போதைய சினிமாவுக்கு ஒத்து வரவில்லையே ...

4. ராஜாதி ராஜா - கத்திக் கொண்டே கவர்ச்சி காட்டும் வில்லி. இரண்டு கதாநாயகிகள். தப்பு செய்கிற அண்ணன்களைத் திருத்துகிற தம்பி இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை.

5. 1977 - அருமையான ஜேம்ஸ் பாண்ட் கதையை டி.ராஜேந்தர் இயக்கத்தில் பார்த்த காமேடி.

6. கந்தசாமி - தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு களம். உலக சினிமாவே திரும்பி பார்க்கிற ஒரு பிரமாண்ட தயாரிப்பு.

7. ஆறுமுகம் - மிஸ்டர் சுரேஸ் கிருஷ்ணா! ரீ மேக் என்று சொல்லுவார்களே தெரியுமா? தெரியாது என்றால் உங்கள் படத்தை நீங்களே ஒரு முறை பாருங்கள்.

8. நான் அவன் இல்லை 2 - நீங்கள் யாருக்காவது பில்லி சூனியம் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தை வாங்கி அனுப்பினால் போதும்.... பைத்தியம் பிடித்து சாவார்கள்

9. இந்திர விழா - அமரன் படம் கொடுத்த இயக்குனர் ஆயிற்றே என்கிற ஆர்வத்தில் படத்தை பார்த்துவிடாதீர்கள்.

10. படிக்காதவன் - ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ..............


பி.கு.
மிக பெரிய சந்தோசம்.

1. டி.ராஜேந்தர் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகரும் படம் எதுவும் எடுத்து நமக்கு சோதனைகளையும் கொடுமைகளையும் செய்யாமல் போனதற்கு.

2. அதைவிட சந்தோசம்....
ஏற்கனவே கடுப்பில் இருக்கும் நமக்கு புளியின் ஓசை, ஓசையில் புளி என்று எந்த மனநோய் வியாதியும் கொடுக்காமல் போனதற்கு .....