இந்த வார காமெடி

பாரிசான் நேஷனலுக்கு ஓட்டு போட்டால் சொர்கத்ததுக்கு போகலாம். - துணைபிரதமரின் செய்தி. ......... சொர்கத்துக்கும் போகலாம்.

உலகமும் தமிழ் ஈழ விடுதலை புலிகளும்.

தமிழ் ஈழ விடுதலைபுலிகள் யார்? அவர்களின் நிலை என்ன? என்பதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அவ்வபோது நடக்கும் உலக மாற்றங்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீது எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதனையும் நாம் புரிந்துக் கொள்வது அவசியம்.

தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று சில பலர்(சில தமிழர்கள் உட்பட) பேசி வருகிறார்கள். சில நாடுகள் அவ்வியக்கத்திற்கு தடையும் விதித்துள்ளது. தமிழ் ஈழ விடுதலை புலிகள் நிச்சயமாக தீவிரவாதிகள் அல்ல. ஏன்? சில உலக உதாரணங்களைப் பார்ப்போம்.

மனிதர்கள் எழுத்து முறையில் ஆவணங்கள் விட்டு சென்ற காலம் முதல், இழந்த தேசத்தை மீட்பதற்கும், ஆட்சி அதிகாரம் கொள்வதற்கும், ஆட்சி அதிகார நிர்வாகத்தை நீக்குவதற்கும் ஒரு நாட்டையோ,மண்ணையோ, தன் பிடிக்குள் கொண்டு வருவதற்கு போர் முறையையே தங்கள் வழியாக கடைபிடித்து வந்திருக்கிறார்கள். இரண்டாம் உலக போருக்கு பிறகு இந்த போர் முறையில் சில மாற்றங்கள் நடந்தது. இந்தியா முதல் முறையாக போர் முறையில் அல்லாமல் பேச்சுவார்தைகளின் மூலம் இழந்த தன் நாட்டு நிர்வாகத்தை ஆட்சி அதிகார வர்கத்திடமிருந்து மீட்டெடுத்தது. இந்த வழிமுறையைப் பின் பற்றி இன்னும் சில நாடுகள் பேச்சுவார்தைகளின் வழி தங்கள் நாடுகளை மீட்டெடுத்தது. உதாரணத்திற்கு மலேசியா,இந்தோனசியா,பர்மா இன்னும்  சில நாடுகள்.

மலேசியாவுடன் இணைந்திருந்த சிங்கப்பூரில் அன்று கம்னியூஸ்டுக்கள் ஆயுத போரில் ஈடுபட்டு வந்தார்கள். பிரச்சனைகளை மேலும் வளர்க்க விரும்பாத, கம்னியூஸ்டுகளின் சிக்கல்கள் மேலும் வளராமல் இருப்பதற்காக அன்றைய மலேசியா பிரதமர் துங்கு அப்தூல் ரகுமான் சிங்கபூரை கம்னியூஸ்டுகளுக்கு பிரித்து கொடுத்தார். இந்தியா சுயராஜ்யம் பெரும்போது வடகத்திய முஸ்லிம்கள் இந்தியர்களோடு சேர்ந்து வாழ முடியாத சூழல் ஏற்பட்ட போது, கலவரங்களை ஏற்படுத்தி பாக்கிஸ்தானாக பிரிந்து சென்றார்கள். பிறகு பக்கிஸ்தானை இரண்டாக உடைக்கும் போது இந்தியாவின் உதவியோடு போர் முறையில் பங்களதேஷாக உருவானது.

இது இப்படி இருக்க, கம்னியூஸ்டுகளை ஒடுக்க சம்பந்தமே இல்லாமல் அமெரிக்கா வியாட்நாமுக்குள் புகுந்து போர் முறையைக் கையாண்டது. இதே போல் சதாம் உசேன் என்கிற ஆட்சியாளரை நீக்க ஈரக்கிலும், தலிபான் ஆட்சியாளர்களை ஒழிக்க ஆப்கானிலும்   அமெரிக்கா மற்றும் சில உலக நாடுகள் புகுந்து போர் முறையை கையாண்டது.

பிரட்டனிடம் இழந்த தேசத்தை மீட்க காந்தி பேச்சு வார்த்தை முறையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் சுபாஸ் சந்திர போஸ் போர் முறையை தேர்ந்தெடுத்தார். இருவருமே தியாகிகள். போராட்டவாதிகள். பகத் சிங், வாஞ்சிநாதன் போன்றவர்கள் அன்றைய ஆட்சியாளர்களால் குற்றவாளிகள் என்றே கூறப்பட்டனர்.

சுய ராஜ்யம் பெற, இழந்த தேசத்தை மீட்க, புதிய அரசாங்கம் தோற்றுவிப்பதற்கு இரண்டு வழி முறைகள் இந்த உலகத்தில் இருந்து வருகிறது. இந்த இரு வழிமுறைகளில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் தேர்ந்தெத்த்து போர் முறை.

சுய நிர்வாகத்தை கொண்டு தன் மக்களுக்கு வளமான, செழிப்பான உயர்ந்த வாழ்க்கை தரத்தை அளிப்பதற்கு தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கு ஒரு நாடு தேவையாக இருக்கிறது. யாருக்கும் அஞ்ஞாத, அடிமையில்லாத ஒரு நாடு. அந்த நாட்டை அடைவதற்கு அவர்கள் தேர்தெடுத்த வழி போர் முறை.

ஆகவே தமிழ் ஈழ விடுதலை புலிகள் சுதந்திர போராட்ட வீரர்கள். தீவிரவாதிகள் அல்ல. தீவிரவாதிகள் என்று சொல்லி வருவது வரலாற்று பிழை.

அது எப்படி ஒரு நாட்டை பிரித்து கொடுப்பது? நிலையான ஒரு அரசாங்கம் உள்ள போது எதற்காக ஒரு நாட்டை பிரித்து கொடுக்க வேண்டும்? பொதுவாக எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி. குறிப்பாக இந்தியா. ஏன் பிரித்து கொடுக்க கூடாது? இதற்கான பதில்

இந்தியாவுக்குள் வாழ முடியாது. வடகத்திய முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்ற போது, இந்தியா உடைந்து பாக்கிஸ்தான் என்கிற நாடு உருவாகவில்லையா? பாக்கிஸ்தானாக வாழ முடியாது என்கிற நிலை வந்தபோது பங்கள்தேஷ்   என்கிற நாடு உருவானது. கம்னியூஸம்தான் வேண்டும் என்ற போது சிங்கபூர் உருவானது. இந்தோனீசியர்கள் வேறு திமோர் லெஸ்தே வேறு என்றபோது, திமோர் லெஸ்தே தனி நாடாக உருவானது.

சோவியத் யூனியன் உடைந்து பல குட்டி நாடுகள் உருவானது. இப்படி கால மாற்றத்திற்கும் ஆட்சியாளர்கள் போக்குக்கும் ஏற்றவாறு தனி நாடுகளும் நாட்டின் எல்லைகளும் மாற்றியமைக்கப்பட்டன. பெருவாரியான ஆசிய நாடுகளின் எல்லை பிரிடிஷ் ஆட்சியாளர்களால் உருவக்கப்பட்டவை. ஆகவே நாடுகளின் எல்லையும் தனி நாடு உருவாதும் மறுபருசீலனைக்கு உட்பட்ட்தே. இதன் அடிப்படையில் இலங்கை நாட்டிலிருந்து தமிழ் ஈழம் பிரிந்து தனி நாடு உருவாவது ஒன்றும் தவறோ பாவமோ இல்லை. இது காலத்தின் கட்டாயம்.

மக்கள் விறும்பும் ஆட்சியாளர்களே மக்களை ஆள வேண்டும் என்பது என்பது ஞனநாயகம். மக்களாட்சி. இலங்கை தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் வாழ முடியாது என்கிற மன நிலையில் உள்ளார்கள். அதானால் வேறு ஒரு வழிமுறையும் கையாளலாம். சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் வாழ வேண்டுமா? அல்லது தனி நாடு வேண்டுமா? என்று தேர்தல் வாக்களிப்பு போல் நடத்தி அதன் முடிவுக்கு ஏற்றவாறு செயல்படலாம். மக்களை மக்களே ஆள வேண்டும் என்பது ஞனநாயக மரபு.

இனி உலக அரசியல் மாற்றங்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீது எவ்வாறு திணிக்கப்பட்ட்து என்பதனைப் பார்ப்போம். இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவின் ஒரே எதிரி சோவியத் யூனியன். சோவியத்தின் ராணுவ மற்றும் விஞ்ஞான வளர்ச்சியை கண்டு அமெரிக்கா மிகவும் பயந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிபோர் நடந்துக் கொண்டிருந்தது. இக்கால கட்டத்தில் சோவியத் யூனியனுக்கு நெருங்கிய நண்பனாக இந்தியா விளங்கியது. ஏறத்தால தம்பி போல். ஆகவே அமெரிக்காவுக்கு இந்தியாவும் எதிரியானது. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் சண்டை மூளும் பட்சத்தில் இந்தியா சோவியத்க்கு ஆதரவாக களத்தில் இறங்கும். அக்காலத்தில் ஆசியாவிலே மிகப் பெரிய ராணுவ நாடாக இந்தியா விளங்கியது

ஆபத்தான காலத்தில் இந்தியாவை சமாளிக்க பாக்கிஸ்தானை தன் நண்பனாக ஏற்றுக் கொண்டது அமெரிக்கா. இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சண்டை மூண்டபோது அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா கந்திக்கு இது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அமெரிக்காவின் வியாபாரத்தை இந்தியாவில் தடைவிதித்தார். இதன் தொடர்ச்சியாக இந்திய கண்டத்தில் மேலும் ஒரு ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா இடம் தேடியது. அமெரிக்காவின் பார்வை இலங்கை மீது விழுந்தது. வடக்கே பாக்கிஸ்தானையும் தெற்கே இலங்கையையும் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா களம் சேர்த்தது.   

டுத்த வாரம் ன்னும்..........