முகிலனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Hulu Selangor இடைத்தேர்தலில் நியாயமாக யாருக்கு அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.

பழனிவேலு, முகிலன், மற்றும் கமலநாதன் பெயர்கள் ஆராயப்பட்ட்து.

1. பழனிவேலு.

பழனிவேலுக்கு நிச்சயமாக அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு தனியாக அரசியல் அறிவு தேவை இல்லை.

2.

பழனியின் பெயர் நிராகரிகப்பட்டப் பின் நியாயமாக முகிலனுக்குதான் இந்த வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். அப்படி நடக்க வில்லை.

ஏன் முகிலனுக்கு அந்த வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் ???

a. இன்று மா.இ.காவில் பதவியில் இருக்கும் பல இளைஞர்கள்(டி.மோகன்,முருகேசன், இன்னும் பலர்) மா.இ.காவில் உறுப்பியம் பெருவதற்கு முன்பே முகிலன் மா.இ. காவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியிலும் பொது சேவையிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த கடந்த தேர்தலில் எல்லாம் கட்சியும், கட்சி சார்ந்த தேசிய முன்ன்னி வெற்றி பெறவும் பாடு பட்டவர். Hulu Selangor தொகுதியில் பழனிக்கு பிறகு மா.இ.கா வில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகிலன்.

b. துணை பிரதமர் உள்ளூர்வாசிக்கே வாய்ப்பு வழங்கப் படும் என்று கூறியிருந்தார். அப்படி பார்க்கையில் முகிலனுக்கு தான் அந்த வாய்ப்பு வழங்க பட்டிருக்க வேண்டும்.

c. கமலநாதனை விட அதிகம் படித்த, நிர்வாக திறன், அரசியல் அனுபவம் கொண்டவர் முகிலன்.

d. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, முகிலன் தமிழ் மொழி பற்றுக் கொண்டவர். இன்று மா. இ. கா வில் இருக்கும் இளைஞர்கள் பலருக்கும் தமிழ் மொழி பற்றும் மொழி அறிவும் கிடையாது. மா. இ. கா வில் துணை அமைச்சர் சரவனணுக்கு அடுத்து மொழி பற்றும் மொழி அறிவும் உடையவர் முகிலன். தமிழ் பள்ளியில் படிக்காமலும், தமிழ் மொழியை சரியாக பேச கூட தெரியாமலும் மா.இ.கா.வில் பதவி வகித்து வரும் இளைஞர்களுக்கு மத்தியில் முகிலன் மிக சிறந்த பேச்சாளரும் மொழி ஆற்றலும் உடையவர்.

பிறகு ஏன் முகிலனுக்கு வாய்ப்பு வழங்கப் படவில்லை.

a. மோகன். முகிலனுக்கு வாய்ப்பு வழங்கப் படாத்தற்கு மிக முக்கிய காரணம் டி. மோகன். முகிலன் இடைத் தேர்தலில் வென்று நாடாளுமன்ற உருப்பினர் ஆன பிறகு, ஏதாவது ஒரு அரசாங்க பதவி கிடைக்கும் பட்சத்தில் மோகன் இரண்டாம் நிலையாக கருதப் படுவார். ஒரு வேலை மந்திரி சபை மாற்றியமைக்கப் பட்டால், வெற்றி பெற்ற முகிலனுக்கு அதில் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. குறந்த பட்சம் நாடாளுமன்ற செயலாளர் பதவியாவது.

b. முகிலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது மெல்ல மோகன் பின்னுக்கு தள்ளப்படுவார். ஒரு வேலை விக்னேஸ்வரன் போல் மா.இ.கா.வில் இருந்து காணாமல் போனாலும் போகலாம்.

c. சாமிவேலுக்கு ஏன் மோகன் மீது இவ்வளவு பாசம். இருக்காதா பின்னே. டி.மோகன் சாமிவேலுவின் சொந்த அத்தை மகன். ஒரு சாதி கார்ர்கள்.

d. அம்னோகார்ர்கள் முகிலன் பெயரை தான் சொன்னார்கள். நான் கடைசி வரை முகிலனுக்கு அந்த வாய்ப்பு வழங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சுபாங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட முருகேசன் பெயரை சொன்னேன். கடைசியாகத்தான் கமலநாதன் என்று முடிவாகியது என்று சாமி ஆங்கில இணைய பக்கத்திற்கு பக்கத்தில் சோதிநாதனை வைத்துக் கொண்டு சொன்னார்.

e. முகிலன் செல்வாக்கு பெற்றால், மோகன் மெல்ல ஓரங்கட்டப் படுவார் என்ற ஒரே காரணத்துக்காக, தன் அத்தை மகனின் அரசியல் வாழ்வு பாதிக்கும் என ஒரே காரணத்துக்காக முகிலனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப் படவில்லை.

இந்த கட்டுரை எழுதியதால், நான் முகிலன் ஆதரவாளர் என்று பொருள் கிடையாது. ஏன் முகிலனுக்கு இந்த வாய்ப்பு வழங்ப்பட வில்லை என்பதுதான் என் கட்டுரை.


ஐய்யோ !!! தமிழ் பள்ளியா ????

எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், என்னைவிட வயதில் மூத்தவர், நெடு நாட்களுக்கு பிறகு சமீபத்தில் சந்தித்தேன். சராமாரியான விசாரிப்பு கேள்விகள். எப்படி இருக்கிறாய்,எங்கு இருக்கிறாய், என்ன செய்கிறாய் இப்படி ஆயிரம் கேள்விகள்.

பிறகு நான் அவர் குடுப்பத்தைப் பற்றி கேட்டேன். பெருமையாய் சொன்னார். அவர் மகள் பெங்களூரில் டாக்டருக்கு படிப்பதாக சொன்னார். SPM-இல் 12A-க்கள் எடுத்ததாக சொன்னார். நான் மிகுந்த சந்தோசத்தில் தமிழ் மொழிபாடம் மற்றும் தமிழ் இலக்கியப் பாடம் இரண்டிலும் A-வா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.

அவர் என்னிடம் கேட்டார், டாக்டருக்கு படிக்க போகும் பெண்ணை தமிழ் படிக்க சொல்கிறாயா என்றார். இத்தனைக்கும் அவர் ஒரு தமிழ் பள்ளி ஆசிரியர். இன்னும் சிறிது காலத்தில் துணைத் தலைமை ஆசிரியர் ஆகப் போகிறவர். அப்போதுதான் இன்னொரு அதிர்ச்சியான சேய்தியும் சொன்னார், அவரின் மூன்று பிள்ளைகளையும் தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று ......

ஆ .... எனக்கு மயக்கம் வராத குறைதான்.... டாக்டருக்கு படிப்பவர்கள் தமிழ் படிக்கக்கூடாது என்கிற ஐதீகம் அன்றுதான் எனக்கு தெரிந்தது. மேலும் தமிழ் பள்ளி ஆசிரியராக இருப்பவர்கள் பல ஆசாமிகள் தங்கள் பிள்ளைகளை பிற மொழி பள்ளிகளுக்கு அனுப்பும் சூட்சமும் அன்றுதான் உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு மற்றொரு நண்பர் நினவுக்கு வந்தார். அவர் பெயர் ஏழுமலை. படிக்காதவர். டாக்சி ஓட்டுகிறார். அவர் மகன் பெயர் ஜகநாதன். மலாயா பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு டாக்டருக்கு படிக்கிறார். இந்த ஜகநாதன் SPM நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் இரண்டு பாடத்திலும் A1 எடுத்தார்.

படிக்காத என் நண்பரின் மகன் எல்லா தேர்விலும் தமிழைத் தேர்வு பாடமாக எடுத்து சிறந்த மதிப்பெண் பெற்று இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறார்.

மெத்தப் படித்த என் இன்னொறு நண்பர் அதுவும் தமிழ் பள்ளி ஆசிரியர் தன் பிள்ளைக்ளுக்கு தமிழ் அறிவை கொடுக்காமலும் தமிழால் வருமானம் பெற்றும் வருகிறார் ....

2009-இல் நான் ரசித்த 10 படங்கள்.

Naan_kadavul

1. பசங்க - தமிழில் சிறுவர்களுக்கான படங்கள் வருவது மிக சொற்பம். எனக்கு தெரிந்து மை டியர் குட்டிசாத்தான், அஞ்சலி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பசங்க. சிறுவர்களை வைத்து கூத்தடிக்காமல் ... சிறுவர்களின் உலகில் புகுந்து எல்லோரும் ஆசைபடும்படி ஒரு படம். இயக்குனர் பாண்டிராஜ்கு ஒரு மிக பெரிய பூச்செண்டு..... சபாஷ்.......

2. நான் கடவுள் - இது படமே இல்லை ...ஆழ்ந்து படிக்க வேண்டிய மிக பெரிய நாவல். அன்பே சிவம், கற்றது தமிழ் போன்று ஆராய்ச்சிக்கு உரிய படம். பாலா மட்டும் ஐரோப்பிய சினிமா எடுக்க போயிருந்தால், உலக சினிமாவையே மாற்றி இருப்பார். லேட் பண்ணாமல் இதே போல் இன்னொரு படமும் கொடுத்துவிடுங்கள்.

3. ஈரம் - தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு மாறி வருகிறது என்பதற்கு இப்படம் ஒரு சான்று.... இது ஒரு பேய் படம் ... ஆனால் வழக்கமான பேய் படத்திற்கு உரிய எந்த காட்சியும் இல்லாமல் மிக தெளிவாக விறுவிறுப்பாக நகரும் திரைகதை....

4. உன்னைப் போல் ஒருவன் - இது கமல் படம் என்பதை விட மோகன்லால் படம் என்று சொல்வதே சிறப்பு. அந்த அளவுக்கு மோகன் லாலின் நடிப்பு. ஆத்திரத்தில் அவர் முகசதை கூட ஆடுகிறது. - கமல் - இந்திய சினிமாவில் உன்னை போல் யார் உண்டு..?

5. வெண்ணிலா கபடி குழு - கோடி கோடியாய் கொட்டி நம்மை துன்புருத்தும் சினிமாகளுக்கு நடுவே மென்மையான கதை, மனம் விட்டு சிரிக்க தூண்டும் நகைசுவை .... (இருந்தாலும் கதாநாயகனைச் சாகடித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை)

6. காதல் கதை - சினிமாவில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்று எதுவும் இல்லை. பார்க்கும் நம் கருத்துக்கு உட்பட்டது. என்ன சொல்ல வேண்டுமோ அதை, அந்த கதைக்கு தேவையான காட்சிகளை மிக தைரியமாக சொன்ன திரு. வேலு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு கைத்தட்டல்.....

7. நாடோடிகள் - இதுவரை காதலை சேர்த்து வைக்கும் படத்தைதான் தமிழ் சினிமாவில் பார்த்து வந்தோம். முதல் முறையாக எந்த ஹீரோயிசமும் இல்லாமல் காதலுக்காக நண்பர்களின் கதையை பார்த்தோம்.

8. திறு திறு துறு துறு - சம்பந்தமே இல்லாத சண்டை காட்சிகள், குடும்பத்தோடு பார்க்க முடியாத பாடல் காட்சிகள் என நமக்கு சலித்து போன திரைகதைகளைத் தாண்டி ..... ஒரு நல்ல படம் அதுவும் குடும்பத்தோடு பார்த்து சிரிக்க ஒரு படம்.(தமிழில் இப்போதெல்லாம் நகைச்சுவை படங்கள் குறைந்துக் கொண்டே வருகிறது).

9. மதுரை To தேனி - பட்டென்று கதை ஆரம்பித்து ... பட்டென்று பேருந்தில் பயணித்து ...... பட்டென்று பஞ்ஞாயத்து ஆரம்பித்து ......... பட்டென்று திருமணம் ஆகி .... பட்டென்று கதை முடிந்து விடுகிறது ..... பிரமாண்டம் என்கிறார்கள், ஹீரோ ஓப்பனிங் என்கிறார்கள், ஹீரோயின் கவர்ச்சி என்கிறார்கள் ... இந்த படம் பாருங்கள் ..... இப்படியும் படம் எடுக்கலாம் என்பதற்கு உதாரணம்.

10. லாடம் - சில ஓட்டைகள் இருந்தாலும் ..... என்னடா படம் இது என்று இல்லாமல் .... அடுத்து என்ன நடக்கும் ... என்ன நடக்கும் என்று நமக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் படம்.... Simply Super என்பார்களே ... அப்படி ஒரு படம்....


பி.கு.

இதுவும் நல்ல படம் தான்

1. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்.(வாழ்த்துகள்)
2. யாவரும் நலம்(பி.சி.ஸ்ரீராமுக்கு ஒரு ஸ்பெஷல் பூச்செண்டு)
3. பேரான்மை(சத்யராஜ்,சரத்குமார் போன்ற Heavy நடிகர்கள் நடிக்க வேண்டிய படம்)
4. மாயாண்டி குடும்பத்தார்.(சிரியல் போல் கொஞ்சம் ஓவரோ?)

குட்டு விழும் 10 படங்கள்

Kandasaamy - Vikram, Shriya

1. வில்லு - ச்சபா ............... என்னத்த சொல்ல .........

2. பெருமாள் - 'என்ன கூத்து காட்றிங்க' என்கிற ரகம் படம். இந்த லட்சணத்தில் நிர்வாண காட்சி வேறு .......

3. மரியாதை - ஒரு காலத்தில் விஜயகாந்த் நல்ல நடிகராகத்தான் இருந்தார். இன்னும் அப்படியே நினைத்துக்கொண்டிருந்தால் எப்படி? முகவாகும் உடல்வாகும் இப்போதைய சினிமாவுக்கு ஒத்து வரவில்லையே ...

4. ராஜாதி ராஜா - கத்திக் கொண்டே கவர்ச்சி காட்டும் வில்லி. இரண்டு கதாநாயகிகள். தப்பு செய்கிற அண்ணன்களைத் திருத்துகிற தம்பி இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை.

5. 1977 - அருமையான ஜேம்ஸ் பாண்ட் கதையை டி.ராஜேந்தர் இயக்கத்தில் பார்த்த காமேடி.

6. கந்தசாமி - தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு களம். உலக சினிமாவே திரும்பி பார்க்கிற ஒரு பிரமாண்ட தயாரிப்பு.

7. ஆறுமுகம் - மிஸ்டர் சுரேஸ் கிருஷ்ணா! ரீ மேக் என்று சொல்லுவார்களே தெரியுமா? தெரியாது என்றால் உங்கள் படத்தை நீங்களே ஒரு முறை பாருங்கள்.

8. நான் அவன் இல்லை 2 - நீங்கள் யாருக்காவது பில்லி சூனியம் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தை வாங்கி அனுப்பினால் போதும்.... பைத்தியம் பிடித்து சாவார்கள்

9. இந்திர விழா - அமரன் படம் கொடுத்த இயக்குனர் ஆயிற்றே என்கிற ஆர்வத்தில் படத்தை பார்த்துவிடாதீர்கள்.

10. படிக்காதவன் - ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ..............


பி.கு.
மிக பெரிய சந்தோசம்.

1. டி.ராஜேந்தர் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகரும் படம் எதுவும் எடுத்து நமக்கு சோதனைகளையும் கொடுமைகளையும் செய்யாமல் போனதற்கு.

2. அதைவிட சந்தோசம்....
ஏற்கனவே கடுப்பில் இருக்கும் நமக்கு புளியின் ஓசை, ஓசையில் புளி என்று எந்த மனநோய் வியாதியும் கொடுக்காமல் போனதற்கு .....




இந்த வார கேள்வி

மா.இ.கா. இளைஞர் பிரிவு தலைவர் மோகனிடம் ஒரு கேள்வி.

எதிர்கட்சி இந்திய நாடளுமன்ற உறுப்பினர்கள் திடிர் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள். பங்களா வீடு, சொகுசு கார்கள் என்று exclusive-ஆக வாழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறீர்கள்.

இந்த 6 வருடங்களில் உங்களின் அபார வளர்ச்சி எத்தனை பேருக்கு தெரியும். உங்களுடைய பழைய வீடும் தற்போதைய புதிய பங்களாவும் எல்லோருக்கும் தெரியுமா? உங்கள்டைய புதிய கார் பற்றி தெரியுமா ....? உங்கள் தம்பி D.A.P டி.கண்ணன் என்பது எல்லோருக்கும் தெரியுமா...? உங்கள் தம்பி லிம் கியட் சியங்கின் செயலாளர் என்பது எத்தனை பேருக்கும் தெரியும் ....? உங்கள் தம்பி D.A.P சார்ப்பில் Kg.Tungku PJ தொகுதியில் நின்று தோற்று போனது எத்தனை பேருக்கு தெரியும் .....?

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலா நீங்கள் மா.இ.கா.வில் இணைந்தீர்கள்...?


இந்த வார கோபம்

கோபம் 1. ஆற்று பாலம் விழுந்து 3 சிறுமிகள் பலி. துயர சம்பவம் நடந்த பின்னரே அதற்கான காரணம்,விசாரணை,மாநில தேசிய அளவிலான விசாரணை என அமர்களபடுவது வாடிக்கையும் வேடிக்கையும் ஆகிவிட்டது. இம்மூன்று குடும்பத்தினருக்கு யார் பொறுப்பான பதில் சொல்வது.

கோபம் 2. கடந்த பொது தேர்தலில் அதிகமான இந்தியர்கள் எதிகட்சிசார்பாக வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள். இவர்கள் ம.இ.காவை போல் அல்லாமல் உண்மையான சமுதாயத்திற்கு சேவை செய்ய போவதாக உறுதி சொன்னார்கள். 20 இந்திய எம்.பி.கள் கொண்ட குழு எம்.ஐ.இ.டி. பற்றி விசாரிப்பதற்கு மா.இ.கா கட்டடத்திற்கு போக போவதாக சொன்னார்கள். ஆனால் ஒரே ஒரு இந்திய எம்.பி. மட்டும் போய் நமக்கு கோபத்தை உண்டு செய்திருக்கிறார்கள். உள்ளூரில் உள்ள வாய் சவடால் பேசும் சந்தியாகோ,மணிவாசகம்,மாணிக்கவாசகம்,குலசேகரன் இன்னும் பலர் ஆதவன் படம் பார்க்க போய் விட்டார்களா என்ன?


கோபம் 3. இந்திய தூதரகம் தொட்ங்கிய கலை கலாச்சார மன்ற விழாவில் நிறைய தமிழர்கள் முகம். தொடக்கி வைத்தது அமைச்சர் கோகிலன் பிள்ளை. தமிழர் உணர்வுகளை எப்போதும் இந்தியாவும் சரி இந்திய தூதரகங்களும் சரி மதிப்பதில்லை. அனால் இங்குள்ள தமிழர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் என்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். சில மாதகளுக்கு முன்பு இதே தூதரகம் முன் ஈழ தமிழர்களுக்காக மறியல் செய்ததை எல்லாம் மறந்து விட்டனர் தமிழர்கள்.

இந்த வார ஜாலி

நேசா தங்களை ஏமாற்றி விட்டதாக நேசா பங்குதாரர்கள் தமிழ் பத்திரிக்கையில் அழுத்திருக்கிறார்கள் .... இது மிகவும் ஜாலியான ஒரு கதை ... மைக்கா ஹொல்டிங்ஸ் பற்றி அவர்களும் நேசா பற்றி இவர்களும் சொல்லும் கதைகள் மிகவும் சுவரசியமாக உள்ளன. இது மேலும் தொடர என் ஆவல்கள். இது போல பல கூட்டறவு சங்கங்கள் நிலையும் இதுதான். இதன் கூத்துகளையும் பிரசுரித்தால் இன்னும் ஜாலியான இருக்கும். குறிப்பாக சாமிவேலுவின் கே.பி.ஜே. இதில் தேசிய நிலநிதி கூட்டறவு மற்றும் தொழிலாளர் கூட்டறவு நாணய சங்கம் இரண்டையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்..... இவ்விரண்டு கூட்டறவு சங்கங்களும் நமக்கு முடிந்த மட்டில் நன்மை செய்து வருகிறது. இவ்விரண்டு சங்கங்களுக்கும் நமது வாழ்த்துக்களும் வணக்கமும்.