இந்த வார ஜாலி

நேசா தங்களை ஏமாற்றி விட்டதாக நேசா பங்குதாரர்கள் தமிழ் பத்திரிக்கையில் அழுத்திருக்கிறார்கள் .... இது மிகவும் ஜாலியான ஒரு கதை ... மைக்கா ஹொல்டிங்ஸ் பற்றி அவர்களும் நேசா பற்றி இவர்களும் சொல்லும் கதைகள் மிகவும் சுவரசியமாக உள்ளன. இது மேலும் தொடர என் ஆவல்கள். இது போல பல கூட்டறவு சங்கங்கள் நிலையும் இதுதான். இதன் கூத்துகளையும் பிரசுரித்தால் இன்னும் ஜாலியான இருக்கும். குறிப்பாக சாமிவேலுவின் கே.பி.ஜே. இதில் தேசிய நிலநிதி கூட்டறவு மற்றும் தொழிலாளர் கூட்டறவு நாணய சங்கம் இரண்டையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்..... இவ்விரண்டு கூட்டறவு சங்கங்களும் நமக்கு முடிந்த மட்டில் நன்மை செய்து வருகிறது. இவ்விரண்டு சங்கங்களுக்கும் நமது வாழ்த்துக்களும் வணக்கமும்.

இந்த வார குட்டு

எல்லா தமிழ் தினசரிகளுக்கும் இந்த வார பலமான குட்டு. நான் எப்பவாது தமிழ் பத்திரிக்கைகளைக் குறை சொல்லிவிட்டால் என் மீது கடுப்பாகி விடுகிறார்கள். நேற்று மூன்று தமிழ் தினசரி வாங்கினேன்(திபாவளி என்பதால்). ஒரு பக்கத்தில் கூட முழவதுமாய் செய்தி கிடையாது. இந்த தலைவர் வாழ்த்து செய்தி, அந்த தலைவர் வாழ்த்து செய்தி, தலைவர் அல்லாதவர் வாழ்த்து செய்தி, வாரியத்தலைவர் வாழ்த்து செய்தி, வாரியம் அல்லாத தலைவர் வாழ்த்து செய்தி,விளம்பரங்கள்,தொலைகாட்சி வானொலி நிகழ்ச்சிநிரல்,சினிமா செய்தி,தமிழ் நாடு அரசியல் செய்தி..... இதில் தமிழ் பத்திரிக்கை வாங்க வில்லை என்றால் முகத்தில் குத்துவது போல் பேசுவது. தயவு செய்து உங்கள் எல்லா பணிகளுக்கும் நடுவில் செய்திகளையும் போடுங்கள்..... இந்த நிலை மாறும் நிலை என்று வரும்(உபயம்: உன்னை போல் ஒருவன்). அதுவரை இந்த தீபாவளி சிறப்பு குட்டு...

இந்த வார பாராட்டு.

இந்த வார பாராட்டு நமது பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களுக்கே. 'இந்திய மக்களின் தேவைகளையைப் பூர்த்தி செய்வதில் மா.இ.கா வெற்றி அடைந்துள்ளது என்று சொல்ல மாட்டேன்.' என்று பகிரங்கமாக மேடையில் தெளிவாக சொன்னதற்கு.