இந்த வார கேள்வி

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த வார கேள்வி ஒன்று கேட்க விரும்புகிறேன்.......
காந்தியை சுட்ட கோட்சே அவர் இனம், இந்திரா காந்தியை சுட்டு கொன்ற அந்த சீக்கியர் அவர் இனம், ராஜிவ் காந்தியை துப்பாக்கி மட்டையால் அடித்து கொலை செய்ய முயன்ற ஒரு பட்டாளத்துகாரர் அவர் இனம், இந்தியாவில் இன்று வரை தொடரும் இந்து முஸ்லீம் கலவரத்தை தொடக்கி வைத்த அலி சின்ன இவர் இனம் .. இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறது. இவர்கள் மீது இல்லாத விரோதமும்,ஆத்திரமும் உங்களுக்கு ஈழ தமிழ் மக்கள் மீதும் அவர்கள் அமைதிக்காகவும் போராடிவரும் தலைவர் பிரபாகரன் மீதும் தொடர்வது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லை...? அது போகட்டும்.... காந்தியை சுட்டவரும், இந்திரா காந்தியை சுட்டவரும் ஒரு இனத்தின் தியாகிகளாக போற்றி, அவர்களுக்கு விழா எடுக்கும் குறைந்த பட்ச உண்மையாவது உங்களுக்கு தெரியுமா...? உங்களின் நியாயமற்ற பேச்சுகளையும் அடாவடி போக்கையும் தமிழர்கள் மன்னித்து விடுவார்கள். அனால் காலம் மன்னிக்காது.

இந்த வார வேடிக்கை

ஆதிக்க வர்கத்தினிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்த காந்தி 'மகாத்மா, போரினால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என நம்பி போர் துவங்கிய சுபாஷ் 'மாவீரர்', அடிமை சங்கிலியை உடைத்து தன் மக்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய மண்டேலா 'போராட்டவாதி', ஹோ சி மின், மார்த்தின் லூதர் கிங்,காசா போராளிகள்,யாசர் அராபாத்,பிடல் காஸ்ட்ரோ இன்னும் கணக்கில் இல்லா பலரும் தியாகிகள்,போராட்டவாதிகள்,வீரர்கள் என கூறிக்கொள்ளும் உலக சமுதாயமே....... ஒரு இனத்தை வெரோடுவெட்டி சாய்க்கும் அராஜகத்தில்..... இளைஞர்களை சுட்டு,இளம் பெண்களை கற்ப்பழித்து, சிறியவர் பெரியார்களை கொன்று குவித்து அந்த ரத்த வாடையில் அரசாட்சி செய்யும் ஒரு அரக்கர் படைக்கு எதிராக சுதந்திர போர் செய்து வரும், ஒரு இனத்தின் அமைதி வாழ்வுக்கு போராடி வரும் தமிழ் விடுதலை புலிகளும் அதன் தலைவர் மாவீரர் பிரபாகரன் மட்டும் தீவிரவாதியா....?

குட்டு விழும் பத்து படங்கள்

  1. சுப்ரமணியபுரம்-கொருரமான வன்முறையை காட்டிய படம். கழுத்தை அறுப்பது,வெட்டி சாய்ப்பது,நண்பனை நண்பனே கொல்வது,காதலியே காதலனை காட்டி கொடுப்பது என படம் நெடுக்க நம் மனதை வன்முறைக்கு மாற்றிய படம்.
  2. குசேலன்-ஒரு நல்ல திரைகதையை எப்படி பாழ் பண்ணலாம் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.
  3. நாயகன்-கண்ணில் பூச்சி பறக்கும் படம். நாயகன் அடிக்கிறார், பறக்கிறார், ஆடுகிறார் பட்டையை கிளப்புகிறார்... ஒரு ஆங்கில படத்தின் கதையை எத்தனை முறை திருடுவார்கள் என்று தெரியவில்லை.
  4. சுட்டபழம்- எப்படி படம் எடுத்தாலும் தமிழர்கள் பார்ப்பார்கள் என்ற தைரியமா மோகனுக்கு ...?
  5. வாரணம் ஆயிரம்- ஐயா நீங்கள் எடுப்பது தமிழ் படம்தானே....? அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு இல்லையே.......
  6. குருவி- விஜய்யை கேட்ப்பதற்கு ஆள் இல்லை. உங்க அலப்பறை தாங்க முடியவில்லை... போதுமடா சாமி......
  7. உளியின் ஓசை-காலத்திற்கு ஒவ்வாத படம்.... கலைஞர் ஐயா உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை....? நல்ல ஆட்சி கொடுங்கள் ... நல்ல படத்தை பிறகு பார்க்கலாம்.
  8. ஏகன்- என்னத்த சொல்ல...... தழுவல் வேலையை சரியாக செய்யுங்கள்... அந்த கால பாலாஜி படம் பாருங்கள் புரியும்......
  9. பந்தயம்-மிஸ்டர் சந்திரசேகர்..... நீங்களுமா.....? டி.ஆர்-ரே தேவலாம் போலிருக்கு.......
  10. தெனாவட்டு- என்ன கொடுமை சார் இது.... கிராமத்து வீரன்.... பட்டணத்து தாதா....... மோதல் ..... இன்னும் எத்தனை பேர் இந்த கதையை படமாக்க போகிறிர்கள்....

2008-இல் நான் ரசித்த பத்து படங்கள்

  1. அஞ்சாதே- நவின இலக்கியம் போல் நகரும் திரைகதை. வில்லன் தந்தை சூடு பட்டு விழும் காட்சியை கண்டு பதறும் சிறுவனின் உணர்ச்சிகள் நம் மனதை பிழிகின்றன.
  2. தசாவதாரம்-மைக்கல் மதன காம ராஜனக்கு பிறகு ஒன்றுக்கு மேல் பட்ட கதாபாத்திரங்களை திரைகதையில் பின்னி பத்து வேடங்களில் நம்மை அசத்திய படம்.
  3. அறை எண் 305-இல் கடவுள்-புலிகேசி அளவுக்கு நகைசுவை இல்லை என்றாலும்,நகைச்சுவை ப்ளஸ் கருத்துக்கள் என கலந்து கட்டிய படம்.
  4. பொல்லாதவன்-ஒரு சின்ன மோட்டார் சைக்கிள் திருட்டை மையமாக கொண்டு அதனால் ஒருவன் படும் இன்னல்களை நமக்கு காட்டிய படம்.
  5. வாழ்த்துக்கள்-பிற மொழி கலப்பு இல்லாமல் படம் முழுக்க நல்ல தமிழில் வசனம் பேசி நம் மனதை கவர்ந்த படம். சீமானுக்கு வாழ்த்துக்க்கள்.
  6. கல்லூரி-மெல்லிய காதல்,கல்லூரி நட்பு,எளிமையான காட்சி அமைப்பு,சிறந்த இசை,அதிர்ச்சியான முடிவு...... படம் முடிந்தும் நம் மனதை விட்டு நீங்க திரைகதை. ஒரே மாதிரி பேசும் அந்த இரட்டையர் காட்சிகள் நல்ல கலகலப்பு.
  7. நேபாளி-மூன்று கோண கதையை குழப்பாமல்,வேறு வேறு கலர் டோனில் கதை சொன்ன விதம் அருமை.
  8. சரோஜா-திரில்லர் கதையில் கட்சிக்கு காட்சி சிரிப்பு வெடி. கதைதான் நாயகன். கதையை மட்டுமே நம்பி எடுத்த படம். ஹேண்ட்ஸ் அப் வெங்கட் பிரபு.
  9. அலிபாபா-வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த திருப்தி. காட்சிக்கு காட்சி திருப்புமுனை.
  10. பொம்மலாட்டம்-சிகப்புரோஜாக்கள்கேப்டன் மகள் படங்களுக்கு பிறகு பாரதிராஜா இயக்கியிருக்கும் த்ரில்லர் படம். யாரும் எதிர்பார்காத முடிவு.