இந்த வார கேள்வி

நேற்றைய ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் வழங்கிய பேட்டியிலிருந்து சில கேள்விகள்.
1. இந்திய சமூதயத்திற்கு நான் நிறைய செய்துள்ளேன். உண்மை தெரியாதவர்கள் என்னை ஏசுகிறார்கள்.
- நீங்கள் செய்து வெற்றி அடைந்த ஒரு திட்டத்தை சொல்லுங்கள்....
1. பெட்டாலிங் ஜெயாவில் இயங்கிய வெண்டோ கல்லூரியை விற்று விட்டு, எதற்கும் பயன் படாத டேவ் கல்லூரியை கட்டியதா?
2. நட்டத்தில் ஓடிய அண்டனியன் பூக் ஷ்டோர் வாங்கி விற்றதையா?
3. பல கோடி வெள்ளியை முழுங்கிய செங்கல் தொழிற்சாலையையா..? அல்லது அந்த ஜூஷ் தொழிற்சாலையையா...?
4. ஜாலான் ஈப்போவில் வாங்கிய கட்சி நிலத்தை விற்று அதன் பணத்தில் பண்டார் உதாமாவில் நிலம் வாங்கியதையா...?

இப்படி அடுக்கிக்கொண்டே போக பல பத்து கேள்விகள் இருக்கிறது .

2. 29 ஆண்டுகள் ஓயாமல் இந்தியர்களின் நலனை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
* அதனால்தான் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டதா..?

3. மக்கள் இன்னும் என் சேவை வேண்டும் என்பதால்தான் மீண்டும் 11 முறையாக என்னை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.....
* ஏந்த மக்கள்....? சரியாக பாரம் கூட பூர்த்தி செய்ய தெரியாத அந்த முட்டாள் கூட்டமா?(தலைவருக்கு மொத்தம் 115 செல்லாத வேட்பு மனு பாரங்கள் கிடைத்துள்ளது-சேய்தி)

உங்களிடம் கேட்க 100 கேள்விகளுடன் அடுத்த வாரம் வருகிறேன்.

இந்த வார வேதனை

பெட்டாலிங் ஜெயாவில் ஏழு வயது சிறுவனைக் கடத்தி 1மில்லியன் பிணைப் பணம் வாங்கிய கடத்தல் குற்றசாட்டு வழக்கில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 13 பேர்கள் கைதாகி விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப் பட்டனர். கைக்குழந்தையுடன் இரண்டு பெண்மணிகள் கையில் விலங்கோடு படம் பிடித்து பத்திரிகையில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தது மிகுந்த அதிர்ச்சியும் அளவு கடந்த வேதனையும் அடந்தேன். குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தன்குடும்பத்தையும் ஆபத்திலும் துன்பத்திலும் மாட்டி விடுவது வேதனையை விட மிகுந்த ஆத்திரத்தையே உண்டாக்குகிறது. சரியான வழிகாட்டுதலும், சமய அறிவும்,கல்வி அறிவும் இல்லாததே இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது பொது இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தலைமைதுவ சண்டைக்கும், அரசாங்கம் தரும் சலுகைகளை அனுபவிப்பதற்கும் நேரம் போதுமானதாய் இல்லை. சமுதாய குடும்ப சிக்கல்கள், அதனால் ஏப்படும் சமூதாய சீர்கேடுகள், இது போன்ற சிக்கல்கள் ஏற்படா வண்ணம் இருக்க எதிர்கால திட்டம் இவைகளைப் பற்றி யோசிக்க எங்கே இருக்கிறது நேரம்.

இந்த வார வருத்தம்

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அடிக்கடி இந்த தமிழ் செய்தி நேர மாற்ற பிரச்சனை நடந்துக் கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் உள்ள எல்லா சிறிய, மிக சிறிய, பெரிய, மிக மிக பெரிய, ஏழே ஏழு உறுப்பினர்கள் கொண்ட இயக்கம்,மன்றம்,கட்சி, இன்னும் யாரெல்லாம் தலைவர்களாக இருக்கிறார்களோ, அத்துனை பேரும் அறிக்கை விட்ட பின், மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே.....ஒரு கட்சியான மா.இ.கா-வில் பதவியில் உள்ள ஒரு வல்லமை படத்த தலைவர் தகவல் அமைச்சரிடம் பேசி முழுகி பிரச்சனையை தீர்த்து வைப்பார். இதில் கொடுமை என்ன என்றால், இந்த கூத்து எனக்கு 10 வயது இருக்கும் போதிலிருந்தே நடக்கிறது. இப்போது எனக்கு வயது 34. இன்று வரை நமக்கு என்ன தேவை, தேவை இல்லை என்று எடுத்து கூற, ஒரு திட்டம் தீட்ட, எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய இன்று உள்ள எந்த தலைவருக்கும் போதிய அறிவு, நாட்டம், சமூதாய பற்று, திறன் எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை.