தமிழ் நாளிதல்கள் அடிக்கும் கோமாளி கூத்து

ஒரே மொழி பள்ளி முறையை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோ முக்ரிஸ் மகாதீர் கூறிய பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் மொழி பற்றாளர்கள் கருத்துகளை வெளியிட்டு இரண்டு நாட்களாக தமிழ் நாளில்தல்கள் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை. தமிழ் பள்ளிகளை மூடிவிடுவதே சரி என்பது என் கருத்து. ஏன் தமிழ் பள்ளிகளை மூடி விடவேண்டும்? பல காரணங்கள் சொல்கிறேன்..........

  • நூறுக்கு தொண்ணுற்று ஒன்பது தமிழ் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். குறிப்பாக தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மேடை, வானொலி, தொலைக்காட்சி-யில் பேசும் தமிழ் மொழி அறிஞர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு ஆணுப்பியவர்கள். இன்று தமிழ் நாளிதல்களில் கண்டன அறிக்கை விடும் பல தலைவர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பியவர்கள். மலேசியாவில் இந்திய ஆய்வியல் துறை உள்ள ஒரே பல்கலைகழகம் என்று பீத்தி கொள்ளும் பல்கலைகழக விரயுரையளர்கள், பேராசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கடமை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இளைஞர் மன்ற தலைவர்கள், இந்து சங்க தலைவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் பள்ளிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போது நம் நாட்டில் ஏன் தமிழ் பள்ளிகள் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சாமிவேலு மற்றும் சரவணன் தவிர பெரும்பாலான தலைவர்கள் (சுப்ர, பண்டிதன், palanivelu, டிஏபி, பிபிபி, கெரக்கான், கேஅடிலன் தலைவர்கள் உட்பட) மற்றும் பலர்தங்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

  • தமிழ் மொழி வளர தமிழ் பள்ளிகள் மட்டும் போதும் என்பது ஒரு மூட நம்பிக்கை. அமரர் அன்பானந்தன் அவர்கள் காலத்தில் வாசிக்கும் பழக்கத்தை பெரும் அளவில் இளைஞர்களிடையே ஊக்குவித்து வந்தார். அன்று பலர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் படிக்கும் எழுதும் திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த இயக்கமும், கட்சியும், சங்கமும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய தலைவர்களுக்கு தேவை, எப்படி பணம் பண்ணுவது, இளைஞர்களை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது. அன்று பெரும்பாலனவர்கள் வீட்டில் கல்கண்டு, விகடன், குமுதம், மாத நாவல்கள் என்று படிப்பதற்கு இருக்கும். வாரம் அல்லது மாத தமிழ் இலக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல் நடக்கும். மொழி வளர்க்க பெரும் முயற்சிகள் நடக்கும். அனால் இன்று மொழி வளர்பதற்கு தலைவர்கள், இயக்கங்கள் போதுமான முயற்சிகள் செய்வதில்லை. அழகு ராணி, வேட்டி ராஜா, சினிமா பாடல் போட்டி போன்றவையே இன்றைய கலாசாரமாக போய் கொண்டிருக்கிறது. மொழி அறிவு வளராத எந்த சமூகமும் உருபடாது என்பது அறிந்தும் மொழி வளர்க்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் கடமை செய்யாமல் இருபது மகா கேவலம். போதாத குறைக்கு சிவாஜி திரைப்பட பிரிவியு ஷோ காண்பதற்கு முதல் ஆளாக செல்வார்கள் அல்லது துணிகடை, சாப்பாட்டு கடை திறப்பு விழாவுக்கு செல்வார்கள். அண்மையில் மக்கள் தலைவர் ஒருவர் பி ஜெ-யில் பாப் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்கினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். எப்படி மோசமான சமுதாயதிற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.

  • இன்று பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் எழுதும் மாணவர்களுக்கு சந்தையில் தமிழ் மொழி தேர்வு வழி காட்டி நூல் கிடையாது. எப்போதாவது பட்டத்துக்கு பிந்திய ஆசிரியர்கள் பயிற்சி மாணவர்கள் சில தேர்வு வழி காட்டி நூல்கள் எழுதுவார்கள். அதும் எல்லா மாணவர்களுக்கும் கிடைக்காது. இந்த எஸ்.தி.பி.எம். பரிட்சைக்கு தமிழ் எடுக்கும் மாணவர்கள் கதி அதோ கதிதான். ஒரே ஒரு தமிழ் கோவை இருக்கும். அதுவும் மீசியும்மில் உள்ளது போல யார் கையிலாவது இருக்கும். அதை வாங்குவதற்குள் பரிட்சையே முடிந்துவிடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் என்ன படிக்க வேண்டும் என்றே பல மாணவர்களுக்கு தெரியாது. எஸ்.தி.பி.எம்.-க்கு டேக்ஸ் புத்தகமும் கிடையாது. அனால் தமிழ் படி, தமிழ் படி என்பார்கள். இன்று வரை எந்த அரசியல் கட்சியாவது, தமிழ் இயக்கமாவது தமிழ் தேர்வு வழி காட்டி நூல் எல்லா தமிழ் எழுதும் மாணவர்களுக்கு கிடைக்கும் வகை பற்றி அக்கறை உள்ளதா? பல மாணவர்கள் தமிழ் பரிட்சை எழுதாதற்கு காரணம், என்ன படிக்க வேண்டும் என்று தெரியாததே.... இந்த சிக்கலை போக்குவதற்கு எந்த தலைவராவது பேசி இருப்பாரா? தமிழ் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு சிக்கல்கள் பல உள்ள போது ஏன் நமக்கு தமிழ் பள்ளிகள் ?

  • என் உறவினர் ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அனைவரையும் மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பினார். காரணம் கேட்டபோது , அவர் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும், என்ஜிநீர் ஆக்க வேண்டும் என்றார். நான், ஏன் தமிழ் பள்ளிக்கு அனுப்பினால் மகள்கள் டாக்டர், எஞ்சினியர் ஆகாதா என்று கேட்டேன். அதற்க்கு அவர், உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்க வையுங்கள், என் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். தமிழ் பள்ளியில் படித்தால் தங்கள் பிள்ளைகள் முட்டாள் ஆகி போகும் என்று கருதும் மானங்கெட்ட இந்த சமுதாயத்திற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.

  • நம் குறைகளை முதலில் களைய முற்படுவோம். பிறகு சண்டைக்கு தயார் ஆவோம். கத்தி இல்லாமல் போருக்கு சென்று பயன் இல்லை.

6 கருத்துகள்:

MyFriend சொன்னது…

அருமையான கருத்து தோழரே..

நமது தலைவர்கள் அவர்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பினால், நாமும் அப்படியே செய்வோம் என்று இல்லையே..

பிற்காலத்தில் என் குழந்தைகளை நான் தமிழ் பள்ளிக்குத்தான் அனுப்புவேன். என்னை பொறுத்தவரை தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களே அறிவாளிகள். அவர்கள் அப்படி ஆகாவிட்டால், வழிகாட்டி தப்பாக இருக்குமே, தமிழும் கல்வியும் காரணமாய் இருக்கவே இருக்காது..

அப்படி தமிழ் பள்ளிகள் மூடப்பட்டாலும், நமது அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் நாம் கற்பித்தே ஆக வேண்டும். நமது கலாச்சாரங்கள் காக்கப்படவேண்டுமெனில், அதற்கு மூலதரம் நமது மொழி.. தமிழ் மொழி..

RAHAWAJ சொன்னது…

ஐயா, உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன் சரியாக எழுதியிருக்கிறீர்கள்

Sathis Kumar சொன்னது…

சிந்திக்க வேண்டிய கருத்துகளாயினும் தமிழ்ப் பள்ளிகளை மூடிவிடுவது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகிவிடாது.

குமுகாயத்தில் வேரூன்றியிருக்கும் சீர்க்கேடுகளை களையெடுக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பள்ளிகளைப் பாதுகாப்பத்திலும் நாம் முனைப்புக் காட்டுவது நலம்.


பி.கு :

//"தமிழ் நாளிதல்கள் அடிக்கும் கோமாளி கூத்து"//

எழுத்துப் பிழை :

நாளிதல்கள் - நாளிதழ்கள்

Thiruu00 சொன்னது…

ஐயாவின் கருத்துக்கு நானும் வருகிறேன். உங்களுடைய கருத்து உண்மையானதே. ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. நம்மிடையே உள்ள பல குறைகளை முதலில் களைய வேண்டும். இல்லையென்றால் நம்மினத்துக்கு எதிரி நாமே மாறிவிடுவோம்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அன்பர் தமிழூசி,

சிந்தனைக்குரிய கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள்.

எதிர்முனை மனவியல் (Reverse Psichology) முறையில் இக்கருத்துகள் நல்ல பயன்களைத் தரலாம்.

தமிழ்ப்பள்ளியைக் கண்டது மழையிலே ஒதுங்கிக்கொள்ளும் நயவஞ்சகர்கள் இருக்கும் வரை தமிழ்ப்பள்ளிகள் எழுந்து நிற்பது என்பது கல்லில் நார் உரிக்கும் செயலயாகத்தான் இருக்கும்.

தமிழ்க் குமுகாயத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய தலைவர்கள் - தலைமையாசிரியர்கள் - ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - உயர்மட்ட ஊழியர்கள் என பலரும் தமிழ்ப்பள்ளியை ஏரெடுத்தும் பார்க்காமல் இருப்பது வெட்கக்கேடான செயல்தான்.

ஆனால், இப்படிப்பட்டவர்கள்தாம் முந்திக்கொண்டு தமிழர்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள் - தமிழ்ப்பள்ளியைக் காக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள் - தமிழர் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று வாயில் நுரைதள்ள பேசுகிறார்கள்.

இதை சொல்லி எங்கே போய் முட்டிக்கொள்வது..!!?

இது ஒருபுறம் இருக்க..

நமக்குள் ஆயிரத்தெட்டு குறைகள் இருக்கலாம். நமக்குள் பிரிவினை பேதங்கள் இருக்கலாம். அடிதடி கூட நடக்கலாம்.

ஆனால், நமது மொழி - நமது இனம் - நமது பள்ளி - நமது உரிமை என்று வரும்போது அனைவரும் பேதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டு நிற்பதே சரியானது!

நமது உள்முகக் குறைகளை முன்னிருத்தினால், நமது போராட்டத்தில் பின்னடைவு ஏற்படும்.

எதிரியின் முன்னால் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது முக்கியம்.

மு.வேலன் சொன்னது…

அருமையாக சொன்னீர்கள்!

திரு. சேம் சுப்பிரமணியம் அவர்கள் சொல்வதையும் இங்கே காணலாம்:
http://aranggetram.blogspot.com/2008/12/blog-post.html