இந்த வார குட்டு

இந்த வாரம் மூவருக்கு அத்திரமான மூன்று குட்டுக்கள்.
குட்டு ஒன்று.
உலக தமிழினதலைவர் மு.கருணாநிதிக்கு. உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, எம்.பி சீட்களை வைத்து தேவையான இலாகா,மந்திரி துறை, சொந்தபந்தங்களுக்கு பதவி கேட்டு வாங்க தெரிந்த மனிதநேயத்துக்கு, ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்த வெறி பிசாசுகளின் காரியாங்களை நிறுத்த முடியவில்லை. தமிழ் பெண்களைச் சூரையாடி, கொன்று குவித்து, அடித்து நொறுக்கி கூத்தாடும் கொள்ளிவாய் பிசாசுகளைப் பார்த்து சிரித்து சிரிப்பொலியில் எழுதுங்கள். தமிழர் உலகம் மெச்சும்.

குட்டு இரண்டு.
இந்திய பாரத தேவி அன்னை மகாலட்சுமி சோனியாவுக்கு. உலகம் முழுவதும் தெரியும், உங்கள் உதவி இல்லாமல் அழுகிய பிணம் தின்னும் சிங்கள பேய் படைகள் இந்த அளவுக்கு அட்டகாசம் பண்ண முடியாது என்று. இரட்டை வேடம் போட்டு ஏன் பிறந்த வீட்டு பெயரை நாசம் செய்கிறீர்கள். உங்கள் மூத்தார் விமானம் வெடித்து செத்தார், மாமியார் குண்டு பட்டு மாண்டார், கணவர் குண்டு வெடித்து சிதறினார். இதற்கான காரணம் ஏன் தெரியுமா? யோசித்து பாருங்கள். இனி வரும் காலங்களில் புண்ணியம் தேடுங்கள்.

குட்டு மூன்று.
உலக நாடுகளுக்கு. தீவிரவாதத்திற்கும் சுதந்திர போரட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறீர்களே. ஒரு பிசாசு கூட்டம் ஒரு சமுதாயத்தின் மீது அட்டூழியம் செய்து வருவதைக் கண்டிக்க வக்கில்லாமல், உலக சமாதானத்தையும் மனித நேயத்தைப் பற்றியும் பேசிவருகிறீகள். எந்த உலக நாட்டுக்கும் மனித நேயத்தைப் பற்றி பேச யோக்கியதை இல்லை.

0 கருத்துகள்: