குட்டு விழும் பத்து படங்கள்

  1. சுப்ரமணியபுரம்-கொருரமான வன்முறையை காட்டிய படம். கழுத்தை அறுப்பது,வெட்டி சாய்ப்பது,நண்பனை நண்பனே கொல்வது,காதலியே காதலனை காட்டி கொடுப்பது என படம் நெடுக்க நம் மனதை வன்முறைக்கு மாற்றிய படம்.
  2. குசேலன்-ஒரு நல்ல திரைகதையை எப்படி பாழ் பண்ணலாம் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.
  3. நாயகன்-கண்ணில் பூச்சி பறக்கும் படம். நாயகன் அடிக்கிறார், பறக்கிறார், ஆடுகிறார் பட்டையை கிளப்புகிறார்... ஒரு ஆங்கில படத்தின் கதையை எத்தனை முறை திருடுவார்கள் என்று தெரியவில்லை.
  4. சுட்டபழம்- எப்படி படம் எடுத்தாலும் தமிழர்கள் பார்ப்பார்கள் என்ற தைரியமா மோகனுக்கு ...?
  5. வாரணம் ஆயிரம்- ஐயா நீங்கள் எடுப்பது தமிழ் படம்தானே....? அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு இல்லையே.......
  6. குருவி- விஜய்யை கேட்ப்பதற்கு ஆள் இல்லை. உங்க அலப்பறை தாங்க முடியவில்லை... போதுமடா சாமி......
  7. உளியின் ஓசை-காலத்திற்கு ஒவ்வாத படம்.... கலைஞர் ஐயா உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை....? நல்ல ஆட்சி கொடுங்கள் ... நல்ல படத்தை பிறகு பார்க்கலாம்.
  8. ஏகன்- என்னத்த சொல்ல...... தழுவல் வேலையை சரியாக செய்யுங்கள்... அந்த கால பாலாஜி படம் பாருங்கள் புரியும்......
  9. பந்தயம்-மிஸ்டர் சந்திரசேகர்..... நீங்களுமா.....? டி.ஆர்-ரே தேவலாம் போலிருக்கு.......
  10. தெனாவட்டு- என்ன கொடுமை சார் இது.... கிராமத்து வீரன்.... பட்டணத்து தாதா....... மோதல் ..... இன்னும் எத்தனை பேர் இந்த கதையை படமாக்க போகிறிர்கள்....

2 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//குருவி- விஜய்யை கேட்ப்பதற்கு ஆள் இல்லை. உங்க அலப்பறை தாங்க முடியவில்லை... போதுமடா சாமி......//

எனது கண்டனங்கள்... டாக்டர் விஜய் எனக் குறிப்பிடவும்...

கே.பாலமுருகன் சொன்னது…

சுப்ரமண்யப்ய்ரம் படத்தையும் குருவி படத்தையும் ஒரே பட்டியலில் வைத்துக் குட்டுக் கொடுப்பது சினிமா குறித்த தங்களின் குறுகலான பார்வையைக் காட்டுகிறது.

சுப்ரமண்யபுரம் படத்தின் கலைவேலைபாடுகளையும் பிராந்திய கட்டமைப்புகளும் கவனிக்கத்தக்க அம்சங்கள். குருவி முழு குப்பை, அதை இதனோடு சேர்த்து மிகவும் மேலோட்டமான சினிமா பார்வை உங்களுடையது.

-தேவையேற்பட்டால் மீண்டும் வருவேன்