இந்த வார மரியாதை.

அமரர் வி.டேவிட் அவர்களுக்கு இந்த வார மரியாதை. ஆளும் கட்சியில் இணைந்தால் மந்திரி பதவி கிடைக்கும் என்று ரகசிய பேட்சு வார்த்தை நடந்தும், அரசியல் போர்வையில் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தும், கடைசி வரை தொழிலாளர் கட்சிக்காகவும், சிறந்த எதிர் கட்சி தலைவராகவும் வாழ்ந்து மறைந்த மக்கள் தொண்டர் டாக்டர் வி.டேவிட் அவர்களுக்கு இந்த வார சிறந்த மரியாதை.

1 கருத்துகள்:

ஆய்தன் சொன்னது…

வணக்கம், தமிழ் ஊசி.

மறைந்த மாபெரும் எதிரணித் தலைவர், தொழிலாளர் நலன் போராட்டவாதி அமரர் வி.டேவிட் அவர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியிருக்கும் தங்கள் மன உணவுக்கு முதல் வணக்கம் செய்கிறேன்.

அமரர் வி.டேவிட் போன்ற கொள்கையுரம் கொண்ட தலைவர்கள் காலம்தோறும் நினைக்கப்பட வேண்டும்.

அவர்களின் போராட்ட உணர்வுகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி ஊக்கமூட்ட வேண்டும்.

அன்னாரின் வரலாற்றுச் சுருக்கத்தை எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தமுறை கண்டிப்பாக செய்யுங்கள் என அன்புக்கட்டளை இடுகிறேன்.

[பின்குறிப்பு] தாங்கள் எழுதியிருந்த 'தமிழ் நாளிதழ்கள் அடிக்கும் கோமாளிக் கூத்து' என்ற பதிவை எமது 'தமிழுயிர்' வலைப்பதிவில் தொடுப்பாக வெளியிட்டுள்ளேன்.

சிந்தனையைத் தூண்டும் தமிழியம் சார்ந்த கட்டுரைகளைப் பலரும் படிக்க பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்துள்ளேன்.

அன்புகூர்ந்து பார்க்கவும்.

தமிழுயிர் அன்பன்,
ஆய்தன்.