- வருடம் எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் இடைநிலை பள்ளி படித்துக்கொண்டு இருந்த காலம். தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் சம்பந்தமான கூட்டம் நாடு தழுவிய நிலையில் நடந்து கொண்டிருந்தது.
- தமிழ் இளைஞர் மணி மன்றம், அப்போதைய தமிழ் ஓசை பத்திரிக்கை ஆசிரியர் திரு.ஆதி குமணன் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் தமிழ் எழுத்து மாற்றத்தை கடுமையாக எதிர்த்தனர்.
- தாமான் டத்தோ ஹோர்மட்,சன்வே பொது மண்டபம் பொது கூட்டங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. சுபாங்,கம்போங் லிண்டுங்க்கான் ஏரியாவில் எந்த பொது கூட்டம் நடந்தாலும் டத்தோ ஹோர்மாட் பொது மண்டபத்தில்தான் நடக்கும்.
- தமிழ் இளைஞர் மணி மன்றம் சார்பாக, தமிழ் எழுத்து சீர்திருத்தம் எதிர்ப்பு கூட்டம் அங்கு நடந்தது. அங்கு பேசிய அனைவரும் தமிழ் எழுத்து சீர்திருத்தம் கூடாது என்று பேசினார்கள்.
- மணி மன்றம் சார்பில் பேசிய ஒருவர்(திரு.விஜயன் என்று நினைக்கிறேன்.) 'கணினிக்கு ஒத்து வரவில்லை என்றால் கணினியை தூக்கி வீசு, தமிழ் மொழியை மாசு படுத்தாதே' என்று ஆவேசமாக பேசினார்.
- திரு.ஆதி குமணன் தொடர்ந்து தமது பத்திரிக்கையில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கடுமையாக எதிர்த்து எழுதி வந்தார்.
- அனால் இதை எல்லாம் மீறி இன்று உலக அளவில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை ஏற்று கொண்டாகி விட்டது.
- கால போக்கில் தமிழ் இளைஞர் மணி மன்றமும் சரி, திரு.ஆதி குமணனும் சரி தமிழ் எழுத்து சீர்திருத்ததை ஏற்று கொண்டு விட்டார்கள்.
- இதில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. ஒரு கால் தமிழ் இளைஞர் மணி மன்றம், திரு.ஆதி குமணன் போன்றோர்களின் கருத்துக்களை கேட்டு தமிழ் எழுத்து சீர்திருத்ததை அமல் படுத்திஇராமல் இருந்தால், தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிக்க பட்டிருக்காதா? உலகமே கணினி மயமாகி வரும் வேலையில் நாம் பின் தங்கி இருக்கமாட்டோமா?
- 'லை' போன்ற எழுத்து வடிவம் ஆதிகாலத்தில் வழக்கில் உள்ள ஒன்று தானே? பிறகு எப்படி இது தமிழ் எழுத்து மாற்றம் ஆகும்.
- இதில் நான் கற்று கொண்ட பாடம் என்னவெனில், எதையும் தீர ஆராய்ந்து, அதன் பலா பலன்கள் தெரிந்து அதன் பின்பே எதையும் எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்று முடிவு செய்ய வேண்டும். கண்மூடி தனமாக எதையும் எதிர்க்க கூடாது.
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
8 மணிநேரம் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக