மஇகாவில் ஒரு நாடகம் நடக்குது எலேலங் கிளியே

இப்போது மாஇகாவில் நடக்கும் நாடகத்தைப் பற்றி சில கேள்விகள் சில பதில்கள்.
கேள்வி ஒன்று : சாமிவேலுவும் சோதி நாதனும் மிக நெருக்கமானவர்கள். எப்படி? சாமிவேலுவின் தம்பி மறைந்த பழனிவேலுவின் மனைவின் தம்பிதான் இந்த தெலோக் கேமாங் சோதிநாதன். சில வருடங்களுக்கு சாமிவேலுவின் அரசியல் செயலாளராகவும் சோதி இருந்துள்ளார். சாமிவேலு எது சொன்னாலும் சோதி கேட்பார், சோதி எது சொன்னாலும் சாமி கேட்பார்.

கேள்வி இரண்டு: பிறகு ஏன் மஇகாவில் சர்சைகள், துரோகி போன்ற வார்த்தைகள். சாமிக்கும் சோதிக்கும் சண்டை? சண்டை ஏதும் இல்லை. நடக்க போகும் ம இ கா தேர்தலுக்கு நடக்கும் நாடகம். எப்படி? சாமிவேலுவின் நேரடி ஆதரவை பெற்ற பழனிவேலுவை சுப்ரா எதிர்கிறார். சாமிவேலு மீது வெறுப்பில் உள்ள கோஷ்டிகள் சுப்ராவிற்கு ஓட்டு போடுவார்கள். சோதியை சாமிவேலுவின் எதிர்ப்பாக காட்டினால் சுப்ராவிற்கு விழும் ஓட்டுகள் சோதிக்கு போகும். அடுத்து சோதிக்கு ஓட்டு போட்ட சாமிக்கு எதிர்ப்பான கோஷ்டிகளை மெல்ல வெட்டி எடுப்பார்கள்.
பிறகு ஏன் பழனிவேலுவை சாமி தேர்தலில் நிறுத்த வேண்டும்? வேறு எதற்கு சாமிக்கு உண்மையான ஆதரவு யார், எதிர்ப்பு யார் என தெரிந்து கொள்வதற்கு தான்.

உண்மையான லைன் ஆப் இதுதான். தலைவர் சோதிநாதன். துணைத்தலைவர் வேள்பாரி. உதவி தலைவர்கள் தேவமணி,சரவணன் மற்றும் ஏனைய ஒருவர்.

இந்த தேர்தலில் சோதி வெற்றி பெற்றால் அடுத்த தலைமை மாற்றம் மேல் சொன்னபடிதான்.

மா இ கா நீண்ட பாரம்பரிய கட்சி. சுதந்திர கால கட்சி. அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே இந்தியர் கட்சி.

இன்று உள்ள ம இ கா தலைவர்களை அகற்ற வேண்டுமே தவிர, கட்சியை எதிர்ப்பது அல்ல. இதற்க்கு யாரவது வழி சொல்வார்களா?

3 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே..

தலைவர்களைத்தான் நீக்க வேண்டும். கட்சியை அல்ல என நீங்கள் கூறுகின்ற கூற்று சிந்திக்கத்தக்கது. ஆனால், இக்கட்சி தொடர்ந்து இனவாத அரசியலை நடத்திவரும் அம்னோ அரசாங்கத்திற்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்தால் கட்சியை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லையே..

seelan sinna sa`yabu சொன்னது…

inthe ke`du ketta naadagatthai suvaipatharkkuthaan KAAi adikkapatta 1500(pe`raalargal)suvainyergal ulare!

oru muraiyai kaiyaalalaam!

virunthukkaage anaivaraiyum alaitthu, unavil nanjai kalanthu kodruvidalam!

**paliyai naan e`truk kolgiren!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அரசியல் பதிவு எழுத இன்னும் ஆழமான அரசியல் பார்வையும்.. புற அரசியல்.. நுண்ணரசியல்.. எல்லாம் கற்க வேண்டும்.

அதுவும் ம.இ.கா அரசியல் கதையெல்லாம்... இன்னும் மலாயா காலத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது.

//இக்கட்சி தொடர்ந்து இனவாத அரசியலை நடத்திவரும் அம்னோ அரசாங்கத்திற்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்தால் கட்சியை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லையே..//

வழிமொழிகிறேன். அதேவேளையில் மக்களாட்சி நாட்டில் இப்படியான கட்சிகள் தேவை. அதுவும் மலேசியாவில் கண்டிப்பாகத் தேவை. அந்தக் கட்சி வலுவானதாக.. ஊழல் அற்றதாக.. நீதியானதாக.. இருக்க வேண்டும்.